Guru Vedham

Guru Vedham

Saturday, April 30, 2016

அணுகுமுறை...

க்ருஷ்ணனின் தபால்

ராதேக்ருஷ்ணா...
மற்றவரின் தவறான நடவடிக்கைகள் உன் வாழ்வை பாதிப்பதை விட,
உன்னுடைய தவறான அணுகுமுறை உன் வாழ்வை பாதிப்பதே அதிகம்...

உன் அணுகுமுறையில் மாற்றம் வந்தால், வாழ்வில் வசந்தம்தான்...
க்ருஷ்ணா என்று ஜபி...
நீ மாற அதுவே வழி…

கோபாலவல்லிதாசர்

Friday, April 29, 2016

ஆசையோடு செய்...

க்ருஷ்ணனின் தபால்

ராதேக்ருஷ்ணா...
உனது காரியங்களை அழகாக ஆசையோடு செய்...
நீ செய்யும் ஒவ்வொரு காரியத்திலும், உனக்கு நன்மை உண்டு...
நீ செய்யும் காரியங்களில் அசிரத்தை இருந்தால், அதுவே உன் மனதையும், உடலையும் பாதிக்கும்...
உன் காரியங்களில் க்ருஷ்ணனின் சந்தோஷம் அடங்கியிருக்கிறது. உனது காரியங்களே உனக்கு க்ருஷ்ணனைக் காட்டிக்கொடுக்கும்….

குருஜீ கோபாலவல்லிதாசர்

Wednesday, April 27, 2016

புத்தம் புது காலை...

க்ருஷ்ணனின் தபால்

ராதேக்ருஷ்ணா...
ஒவ்வொரு விடியலும் உனக்காகவே...
ஒவ்வொரு சூரிய உதயமும் உனக்கான நல்ல சேதியை கொண்டுவருகிறது...

ஒவ்வொரு நாளும் உன் வாழ்வில் ஒரு புதிய அத்தியாயமே...
உன்னுள் இன்று புதிய சக்தி பிறக்கிறது...

உன் வாழ்வை வளமாக்க, உன் கண்ணனே உன்னை எழுப்புகின்றான்...
புத்தம் புது காலை...
க்ருஷ்ண ஆசீர்வாதங்களுடன்…

குருஜீ கோபாலவல்லிதாசர்

Tuesday, April 26, 2016

நினைவில் வை...

க்ருஷ்ணனின் தபால்

ராதேக்ருஷ்ணா...
நாம் அல்பமானவர்கள் என்று நினைக்கும் எத்தனையோ பேர், இந்த வாழ்க்கையில் சாதாரணமாக எல்லாவற்றிலும் ஜெயித்துக்கொண்டிருக்கிறார்கள்.
எல்லோருக்குள்ளும்
க்ருஷ்ணன் இருப்பதை நினைவில் வை...

ஒவ்வொரு ஜீவனுக்கும் வாழும் திறமை உள்ளேயே உள்ளது…

குருஜீ கோபாலவல்லிதாசர்

மன உறுதி...

க்ருஷ்ணனின் தபால்

ராதேக்ருஷ்ணா...
மனதில் உறுதி இருந்தால், எல்லா நிலைமைகளையும், எல்லா மனிதர்களையும் உன்னால் சமாளிக்கமுடியும்.
விடாமல் க்ருஷ்ணா என்று ஜபி. க்ருஷ்ணன் உனக்கு நல்ல மன உறுதி தருவான்…

குருஜீ கோபாலவல்லிதாசர்

Sunday, April 24, 2016

தவறுகளை மற..

க்ருஷ்ணனின் தபால்

ராதேக்ருஷ்ணா...
தவறுகள் செய்யாதவர் எவருமில்லை...
ஒருவர் செய்தது தவறு என்று நாம் முடிவு செய்து, திரும்பத் திரும்ப நாம் அதையே பேசிக்கொண்டிருந்தால், நினைத்திருந்தால், நிச்சயம் வாழ்வில் முன்னேற முடியாது...

கண்ணனை நினை....
மற்றவர் தவறுகளை மற..

கோபாலவல்லிதாசர்

Saturday, April 23, 2016

க்ருஷ்ணனை உணரவே...

க்ருஷ்ணனின் தபால்

ராதேக்ருஷ்ணா…

சிலர் கொண்டாடுவதால், நீ பெரிய ஆளுமில்லை...
சிலர் கேவலப்படுத்துவதால் நீ கேவலமுமில்லை...
அவரவருக்கு தோன்றிய படி நம்மை நினைப்பார்...
அவர்களுக்காக நாம் இங்கே வரவில்லை...

நீ வந்தது உன்னை உணரவே...
நீ வந்தது க்ருஷ்ணனை
உணரவே...

இந்த மனிதர் இன்று இருக்கார்கள்..
நாளை இருக்கப்போவதில்லை….

குருஜீ கோபாலவல்லிதாசர்

Friday, April 22, 2016

நீ மாறவேண்டும்…

க்ருஷ்ணனின் தபால்

ராதேக்ருஷ்ணா...
உன்னை யாரும் பயமுறுத்தவில்லை... நீயே தான் பயப்படுகிறாய்...
உன்னை யாரும் குழப்பவில்லை... நீயே தான் குழம்புகிறாய்....
உன்னை யாரும் வெறுப்பேற்றவில்லை....
நீயே தான் உன்னை படுத்திக்கொள்கிறாய்...

அடுத்தவர் மேல் பழி போடுவதை விட்டு, உன்னை பலமாக்கிக்கொள்...
நாமஜபம் செய்...
நீ மாறிவிடுவாய்....
நீ தான் மாறவேண்டும்…

குருஜீ கோபாலவல்லிதாசர்

Thursday, April 21, 2016

பூர்த்தி செய்வாயா?

க்ருஷ்ணனின் தபால்

ராதேக்ருஷ்ணா...
க்ருஷ்ணன் உன்னிடத்தில் என்ன எதிர்பார்க்கிறான் தெரியுமா ?!?
நீ எப்போதும் சிரித்துக்கொண்டு, வாழ்வில் நடக்கும் எல்லாவற்றையும் தைரியமாய் எதிர்கொண்டு, நம்பிக்கையுடன் உன் கடமைகளை செய்துகொண்டு, சிரத்தையோடு வாழ்வதைத் தான் கண்ணன் உன்னிடம் எதிர்பார்க்கிறான் ...
நீ இப்படி இருப்பதற்கு என்னவெல்லாம் தேவையோ, அத்தனையும் கண்ணன் தருகிறான்...
கண்ணனின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாயா ?!?!

குருஜீ கோபாலவல்லிதாசர்

Tuesday, April 19, 2016

தெய்வீக அனுபவம்

க்ருஷ்ணனின் தபால்

ராதேக்ருஷ்ணா...
தெய்வீக அனுபவம் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதம்...
தெய்வீகம் என்பது அதிசயங்கள் அல்ல...
தெய்வீகம் என்பது உணர்தலும், அனுபவித்தலும் ஆகும்...
உன் வாழ்க்கையில் நீ நிம்மதியாக இருந்தால், அதுவே தெய்வீக அனுபவம்....
மற்றவருக்கு உண்டாகும் அனுபவங்கள், உனக்குத் தேவையில்லை என்று கண்ணன் முடிவு செய்கிறான் !!!
உனக்கு என்ன அனுபவங்கள் நல்லது என்பதை கண்ணன் தீர்மானிக்கட்டும்...நீயாக முடிவு செய்யாதே..

குருஜீ கோபாலவல்லிதாசர்

Saturday, April 16, 2016

என்ன யோசனை ?

க்ருஷ்ணனின் தபால்

ராதேக்ருஷ்ணா...
என்ன யோசனை ?!?
நல்லதே நடந்தது...
நீ தேவையில்லாமல் யோசித்தே, பல நல்ல விஷயங்களை தவறாக புரிந்து கொள்கிறாய்...

நடந்ததும், நடப்பதும், நடக்கப்போவதும் நல்லதே...
க்ருஷ்ணனுக்குத் தெரியும் என்று நிம்மதியாய் இரு…

குருஜீ கோபாலவல்லிதாசர்

Thursday, April 14, 2016

வாழ்க்கைச் சக்கரம்

க்ருஷ்ணனின் தபால்

ராதேக்ருஷ்ணா...
வாழ்க்கை ஒரு சக்கரம்...
சுற்றிக்கொண்டே இருக்கும்...
யாருக்காகவும் எதற்காகவும் அது நிற்காது...

போன நொடி போல் இந்த நொடி இல்லை...
அதற்குள் உலகில் எத்தனையோ மாற்றங்கள்...

நடந்தவைகள், நடப்பவைகள், நடக்கப்போகிறவைகள், எல்லாம் மாறுதலுக்கு உட்பட்டது...
அதனால் மற்றவர் உனக்கு செய்த அவமரியாதை, துரோகம், எல்லாவற்றையும் மறந்து இந்த நொடி கண்ணனை நினைந்து வாழ்ந்துவிடு…

குருஜீ கோபாலவல்லிதாசர்

Wednesday, April 13, 2016

துர்முகி வருஷ ஆசிர்வாதங்கள்!


எல்லாம் புதிதே....

க்ருஷ்ணனின் தபால்

ராதேக்ருஷ்ணா…

இனி புதிதாய் வாழ்...
புதியதாய் தமிழ் வருஷம் பிறக்கிறது...
புதியதாய் வாழ்க்கை தொடங்குகிறது...
புதியதாய் சிந்தனை ஆரம்பமாகிறது...
புதியதாய் பக்தி உதயமாகிறது...
புதியதாய் பலம் உண்டாகிறது...
புதியதாய் உற்சாகம்
எழுகிறது...

புதியதாய் க்ருஷ்ண அனுபவங்கள் கிடைக்கிறது...
புதியதாய் வாழ்வின் அர்த்தம் புரிகிறது...
புதியதாய் ஆரோக்கியம் கிளர்ந்து எழுகிறது...
புதியதாய் ஞான வைராக்கியங்கள் துளிர்க்கிறது...
புதியதாய் பகவானின் நாம ஜபம் தொடங்கு...
இனி எல்லாம் புதிதே....
இனி என்றும் புதிதே…

குருஜீ கோபாலவல்லிதாசர்

Tuesday, April 12, 2016

தெளிந்த நல்லறிவு

க்ருஷ்ணனின் தபால்

ராதேக்ருஷ்ணா...
மனிதர்கள் சொல்வதெல்லாம் உன் நன்மைக்கல்ல....
யார் எதைப் பற்றிச் சொன்னாலும், அப்படியே நம்பாதே. முடிவு செய்யாதே...
நிதானமாய் யோசி...
சொல்பவரின் குணம், நடவடிக்கை, சொல்வதற்கான காரணம் எல்லாவற்றையும் யோசி.
அவசரப்பட்டு ஒருவரைப் பற்றியோ, ஒரு விஷயத்தைப் பற்றியோ, தவறாக முடிவு செய்து விடாதே...

க்ருஷ்ண நாம ஜபம் செய்.., 
தெளிந்த நல்லறிவு உண்டாகும்…

குருஜீ கோபாலவல்லிதாசர்

Monday, April 11, 2016

பயமில்லாமல் இரு…

க்ருஷ்ணனின் தபால்

ராதேக்ருஷ்ணா...
உன்னை கண்ணன் பூரணமாய் நம்புகிறான்...
உன்னால் முடியுமென்று கண்ணனுக்கு நன்றாகத் தெரியும்...
நீ எதையும் சமாளித்து, வெற்றி பெறுவாய் என்பதில் கண்ணனுக்குத் துளியும் சந்தேகமில்லை...
உனக்கு நல்லதை மட்டுமே கண்ணன் தருகிறான்...
பயமில்லாமல் இரு…

குருஜீ கோபாலவல்லிதாசர்

Sunday, April 10, 2016

மனசாட்சி

க்ருஷ்ணனின் தபால்

ராதேக்ருஷ்ணா...
ஒரு விஷயத்தை, அவரவர் அனுபவம், ஆசை, இவைகளைக்கொண்டு தீர்மானிக்கிறார்கள்...
அதனால் ஒவ்வொருவருடைய அணுகுமுறையும் மாறுபடும்...
மற்றவருடைய அணுகுமுறை தவறென்றோ, சரியென்றோ, நீ முடிவு செய்யாதே...
நீ உன் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் வாழ்...
க்ருஷ்ணனே உன் மனசாட்சி…


குருஜீ கோபாலவல்லிதாசர்

Saturday, April 9, 2016

சமர்ப்பித்து விடு...

க்ருஷ்ணனின் தபால்

ராதேக்ருஷ்ணா...
மனதில் குற்ற உணர்ச்சியோடு வாழ்வதைப் போல் நரக வேதனை எதுவும் இல்லை...
உன் குற்ற உணர்ச்சிகளை க்ருஷ்ணன் பாதத்தில் சமர்ப்பித்து விடு...
இனி குற்ற உணர்ச்சி வரும்படியான காரியங்களை செய்யாமலிருக்க க்ருஷ்ணனிடம் ப்ரார்த்தனை செய்...
போனது போகட்டும்..
செய்த தவறுகளையே நினைத்து நொந்து போகாதே…


குருஜீ கோபாலவல்லிதாசர்

ஆசீர்வாதங்கள் உண்டு...

க்ருஷ்ணனின் தபால்

ராதேக்ருஷ்ணா...
உனக்கு ஒரு குறையுமில்லை...
நிறைய மஹாத்மாக்களின் பூரண ஆசீர்வாதங்கள் உனக்குண்டு...
உன் வாழ்வில் நிறைய தெய்வீக அனுபவங்கள் உனக்குக் கிடைத்திருக்கிறது...
இன்னும் நிறைய தெய்வீக அனுபவங்கள் காத்திருக்கிறது....
சந்தோஷமும் நிம்மதியும் உன் சொத்து….

குருஜீ கோபாலவல்லிதாசர்

Thursday, April 7, 2016

பக்தி


க்ருஷ்ணனின் தபால்


ராதேக்ருஷ்ணா...
மனிதருக்கு பகவானிடத்தில் மட்டும் நாட்டம் இருந்தால், மற்றவரின் குறைகளில் நாட்டம் இருக்காது...
பக்தி என்பதே நம்மை பக்குவப்படுத்தும் வழி...
பக்தியை, பக்தர்களை, குருவை குறை சொல்பவர்களுக்கு, பரமானந்தத்தைப் புரிந்துகொள்ள முடியாது... 

குருஜீ கோபாலவல்லிதாசர்

Wednesday, April 6, 2016

சொல்லித்தருவான்...



க்ருஷ்ணனின் தபால்

மனிதர்கள் பிடிவாதக்காரர்கள்...
நீயும் அப்படித்தான்...
நானும் அப்படித்தான்...

உன் பிடிவாதம் எதில், எவ்வளவு என்பதை நீ தெரிந்துகொள்...
அதேபோல் மற்றவரையும் புரிந்து நடந்துகொள்...
நம்மால் சமாளிக்க முடியாமல், உலகில் யாருமில்லை...கொஞ்சம் நிதானமும், விடாமுயற்சியும், நம்பிக்கையும் இருந்தால் போதும்...
க்ருஷ்ணனை இறுக்கிப் பிடி. அவன் சொல்லித்தருவான்...
குருஜீ கோபாலவல்லிதாசர்

Tuesday, April 5, 2016

உயர்த்திக்கொள்...

க்ருஷ்ணனின் தபால்

உன் மதிப்பை முடிவு செய்வது, மற்றவர் அல்ல...
உன் மதிப்பை தீர்மானிப்பது, உன் நடவடிக்கைகளும், எண்ணங்களுமே...
உன் மதிப்பை நீ தான் இறக்கிக்கொள்கிறாய்...
உன் மனதையும், எண்ணங்களையும், செயல்களையும் உயர்த்திக்கொள்...
க்ருஷ்ணனைப் பிடித்துக்கொள்...
உன்னை உயர்த்திக்கொள்...

குருஜீ கோபாலவல்லிதாசர்

Monday, April 4, 2016

க்ருஷ்ணன் புரியவைக்கட்டும்…

க்ருஷ்ணனின் தபால்

ராதேக்ருஷ்ணா....
சிலருக்கு என்ன சொன்னாலும், எப்படி சொன்னாலும் புரியாது.
அவர்கள் தாங்கள் தான் சரி என்று நினைத்து வாதிடுவார்கள்...
காலம் தான் அவர்களைத் திருத்தமுடியும். நீ அவர்களுக்காக பிரார்த்தனை செய்...
அதற்கு மேல் நீ அவர்களுக்காக மெனக்கெடாதே...
க்ருஷ்ணன் அவர்களுக்கு வாழ்வை புரியவைக்கட்டும்…


குருஜீ கோபாலவல்லிதாசர்

உள்ளபடி அறிவான்...

க்ருஷ்ணனின் தபால்

ராதேக்ருஷ்ணா...
சிலர் சொல்வதைக் கொண்டு, யாரையும் எடை போடாதே...
சில சந்தர்ப்பங்களைக் கொண்டு, யாரைப்பற்றியும் ஒரு தீர்மானத்திற்கு வராதே...
ஒருவரைப் பற்றி தீர்மானிப்பதற்கு முன், பலமுறை யோசி...
க்ருஷ்ண நாம ஜபம் செய்.
கண்ணன் மட்டுமே எல்லோரையும் உள்ளபடி அறிவான்...

ஒருவரைப் பற்றி தவறாய் முடிவு செய்துவிட்டு வருந்தாதே…

குருஜீ கோபாலவல்லிதாசர்

Saturday, April 2, 2016

தலைக்கணம் வேண்டாம்...


க்ருஷ்ணனின் தபால்


ராதேக்ருஷ்ணா...
நீதான் உலகில் புத்திசாலி என்று நினைத்துவிட்டால்,
உன்னை விட முட்டாள் யாருமில்லை...
உனக்குத் தெரிந்த விஷயங்களிலேயே, உன்னைவிட நன்றாய் அறிந்தவர் உலகில்
பலகோடி பேர் உண்டு...
நீ தெரிந்துகொள்ள வேண்டியது இன்னும் நிறைய உள்ளது...
அதனால் தலைக்கணம் வேண்டாம்…


-குருஜீ கோபாலவல்லிதாசர்