Guru Vedham

Guru Vedham

Monday, May 11, 2015

இருந்தான்...இருக்கிறான்..இருப்பான்….


ராதேக்ருஷ்ணா

நாள் போய்கொண்டிருக்கிறது...
நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது...
வாழ்க்கை பயணம் ஆரம்பித்து பல விஷயங்கள் நடந்துவிட்டது...
சில நமக்குப் பிடித்தது...பல நமக்கு பிடிக்கவில்லை...ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்...
எல்லா சமயமும் கண்ணன் உன்னுடனே இருந்தான்...இருக்கிறான்..இருப்பான்….


கேவலப்படுத்தலாமா???


ராதேக்ருஷ்ணா

உன் உடல் உன் க்ருஷ்ணன் தந்தது...
உன் வாழ்க்கை உன் க்ருஷ்ணன் தந்தது...
உன் குடும்பம் உன் க்ருஷ்ணன் தந்தது...
உன் வேலை உன் க்ருஷ்ணன் தந்தது...
உன் கடமை உன் க்ருஷ்ணன் தந்தது...
உன் க்ருஷ்ணன் தந்தது எப்படி உனக்கு கெடுதல் செய்யும்???
உன் க்ருஷ்ணன் தந்ததை நீ கேவலப்படுத்தலாமா???


ஏதுமில்லை…


ராதேக்ருஷ்ணா...
பொறாமையினால் இதுவரை யாரும் எதையும் அடைந்ததில்லை...
பக்தியினால் இதுவரை யாரும் எதையும் இழந்ததில்லை...
சத்குருவினால் யாரும் இதுவரை கஷ்டப்பட்டதில்லை...
க்ருஷ்ணனால் யாரும் இதுவரை நஷ்டப்பட்டதில்லை...
நாமஜபத்தினால் முடியாததென்று உலகில் இதுவரை ஏதுமில்லை…


எஜமானன்….


ராதேக்ருஷ்ணா

உடல் ஒரு அறிவில்லாத பொருள். அழியாத ஆத்மாவான நீ உள்ளே இருப்பதால் தான், உடலிள் இருக்கும் கண், காது, மூக்கு, கை, கால் போன்ற எல்லாம் வேலை செய்கிறது. உன் உடல் உனக்கு ஒரு வேலைக்காரரே... நீ தான் உடலின் எஜமானன்...உனக்கு க்ருஷ்ணன் எஜமானன்….


பக்குவப்படுத்துகிறான்…


ராதேக்ருஷ்ணா

உன் மனதை உன்னால் க்ருஷ்ண பலத்தால் வெல்ல முடியும். உன் மனதை உன்னால் க்ருஷ்ண க்ருபையால் மாற்றமுடியும். உன் மனதை உன் க்ருஷ்ணன் ஒரு நாளும் நொருங்கிப்போக விடமாட்டான்... உன் கண்ணனே உன் மனதை பக்குவப்படுத்துகிறான்…