Guru Vedham

Guru Vedham

Wednesday, September 30, 2015

ஆத்மசமர்ப்பணம்


ராதேக்ருஷ்ணா

கண்ணனிடத்தில் நீ உன்னை தந்துவிடு....
கன்றுகளையும் மாடுகளையும் அழகாக மேய்த்த சிறந்த மேய்ப்பன் அல்லவோ நம் கண்ணன்...
உன் இந்திரியங்களையும், மனதையும், தன் இஷ்டப்படி மேய்த்து உனக்குத் தன்னையும், தன் லீலைகளையும் பூரணமாகத் தருவான்...
கண்ணனின் திருவடியில் ஆத்மசமர்ப்பணம் செய்....
கொஞ்சம் கண்ணனின் பசுவாய் வாழ்ந்து பார்….

Tuesday, September 29, 2015

யசோதா மாதா….


ராதேக்ருஷ்ணா

உன் மனதை யசோதா மாதாவிடம் தந்துவிடு....
அவள் அதை க்ருஷ்ணனோடு கட்டிப்போட்டுவிடுவாள்...
அவன் எங்கே போனாலும் அதை இழுத்துக்கொண்டு போவான்...
சரி யசோதா மாதாவை எங்கே தேடுவது ????
உன் குருவே க்ருஷ்ணனின் யசோதா மாதா….

Monday, September 28, 2015

ராச லீலா உண்டு....


ராதேக்ருஷ்ணா

உனக்கென்று இருக்கும் நிதி ராதிகாவும், கண்ணனும்...
ப்ருந்தாவனத்தில் நிதிவனத்தில் தினமும் உனக்காக இந்த திவ்ய நிதி காத்திருக்கிறது...
எப்போது வரப்போகிறாய் நிதிவனத்திற்கு ????
கண்ணனும் ராதையும் கேட்கச்சொன்னார்கள் ...
இன்று இரவும் நிதிவனத்தில் ராச லீலா உண்டு....
ராதிகா சொல்லச் சொன்னாள்….

தயாராகு….


ராதேக்ருஷ்ணா

ப்ருந்தாவனத்தில் உனக்காக ஒரு உள்ளம் கவர் கள்வனும், அவன் காதலியும் வெகு காலமாக காத்திருக்கிறார்கள்...
உன் பேரைச் சொல்லிக் கூப்பிடுகிறார்கள்...
சீக்கிரம் வரத் தயாராகு….

உன்னுள்ளே இருக்கிறது


ராதேக்ருஷ்ணா

உன்னுள்ளே நிரந்தரமாக இருக்கிறது சாந்தியும், நிம்மதியும்....
நீ அதை வெளியில் தேடினால் ஒரு நாளும் கிடைக்காது...
உன் இதய குகைக்குள் ஒளிந்திருக்கும் உன்னதமான அமைதியை நீ உணர, விடாமல் க்ருஷ்ண நாமத்தை ஜபி...
உள்ளிருக்கும் ஆனந்தத்தில் நீ திளைத்தால், எதுவுமே உன்னைப் பாதிக்காது…


அழைத்துச்செல்வான்…


ராதேக்ருஷ்ணா

பகவானின் கருணையை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது....
அவனை அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்படு...
க்ருஷ்ணனிடம் பிரார்த்தனை செய்...
நிச்சயம் அவன் உனக்குத் தன் கருணையைக் காட்டும் இமயமலைக்கு உன்னை அழைத்துச்செல்வான்…

Wednesday, September 23, 2015

தேவ பூமி


ராதேக்ருஷ்ணா

இமாலயம் தேவ பூமியே...
எங்கு பார்த்தாலும் இயற்கை அன்னையின் தெய்வீக காட்சி...
இமாலயத்தின் மடியில் எத்தனை ரிஷிகள் தவம் செய்தனர்...செய்கின்றனர்... எத்தனை புராண இதிஹாச நிகழ்ச்சிகள் இந்த இமாலயத்தில்...
ஹே இமாலயமே... நாங்கள் யோகிகள் அல்ல...
நாங்கள் சித்தர்கள் அல்ல...
நாங்கள் சாதாரண மனிதர்கள்...
எங்களுக்கு பகவானின் பக்தியை அனுபவிக்கும் தகுதியைத் தந்துவிடு…

உனக்காக கெஞ்சுகிறாள்...


ராதேக்ருஷ்ணா

உனக்காக ராதிகா ராணி கண்ணனிடம் கெஞ்சுகிறாள்...
அதனால் நிச்சயம் ஒரு நாள் நீயும் கண்ணனோடும், ராதிகாவோடும், கோபிகைகளோடும் ப்ருந்தாவனத்தில் ராச லீலாவை அனுபவிப்பாய்…

.ராதே ராதே...


ராதேக்ருஷ்ணா

ஜோரா சொல்லு...ராதே ராதே...
அழகா சொல்லு...ராதே ராதே...
நாளைக்கு நம்ம ராதிகாரணியோட பிறந்தநாள்...
க்ருஷ்ண ஜெயந்தி எப்படிக் கொண்டாடினாயோ அதே போல் ஜோரா நாம ஜபத்தோடு கொண்டாடு...
நாளைக்கு உன் வீட்டிற்கு ராதாராணி வரப்போறாள்...
காத்திரு...
உனக்கு க்ருஷ்ணனைத் தர அவள் ஆசையோடிருக்கிறாள்...
ஹே ராதே...
நாங்கள் பக்திக்கு ஆசைப்படும் குழந்தைகள்.... உன் ப்ரேமையால் எங்களை க்ருஷ்ண பக்தியில் திளைக்க அருள் செய்…

ஹிமாலயம் வாருங்கள்...


ராதேக்ருஷ்ணா

கங்கா மாதாவே....
உனக்கு கோடி நமஸ்காரம்...
ஹிமாலய பர்வதமே...
உனக்குப் பல்லாயிரம் கோடி நமஸ்காரங்கள்...
ஹே பக்த ஜனங்களே...
ஒரு முறை ஹிமாலயம் வாருங்கள்...
கங்கோத்திரி பாருங்கள்...
கங்கையை நினையுங்கள்...
நிச்சயமாக பாவங்கள் அழியும்...
சத்தியமாக பக்தி கூடும்...
தீர்மானமாக ஞான,வைராக்கியம் வரும்....
சந்தேகமில்லாமல் பகவான் தர்சனம் தருவான்...
ஒங்கி உலகளந்த உத்தமனின் திருவடி தீர்த்தமான கங்கா உங்களுக்கு எல்லா வளமும், நலமும் தருவாள்…

கங்கை


ராதேக்ருஷ்ணா

கங்கைக் கரையோரமாக எங்கள் பிரயாணம்...
இப்போது கங்கைக் கரையில் நின்றுகொண்டிருக்கிறேன்...
முமூர்த்திகள் சதுர்முக ப்ரம்மா, விஷ்ணு பகவான், சிவபெருமான் ஆகியோரின் கருணையால் பூமிக்கு வந்தவள் கங்கா மாதா...
பார்த்தாலோ, நினைத்தாலோ, ஒரு துளி அருந்தினாலோ, நம்மை பவித்தரமாக்குபவள் கங்கா...
ஹே கங்கா மாதா....
உன்னைப் போல் நாங்களும் க்ருஷ்ணனின் திருவடியோடிருக்க பொங்கி பொங்கி ஆசீர்வாதம் செய்….

Tuesday, September 22, 2015

கோடி நமஸ்காரங்கள்....


ராதேக்ருஷ்ணா

இமாலயமே உனக்கு கோடி நமஸ்காரங்கள்....
உன் மடியில் கோடி யோகிகளும், பக்தர்களும், வாழ்கின்றார்கள்....
எங்களுக்கும் உன் மடியில் ஒரு ஜன்மா தா...
ஒரு தாவரமாகவோ, பூச்சியாகவோ, மிருகமாகவோ, கல்லாகவோ என்னையும் வைத்துக்கொள்...
ஹே யமுனா மாதா...
நாங்கள் க்ருஷ்ணனின் சொத்தாக இருக்க பூரணமாய் 
ஆசீர்வாதம் தா...
நாங்கள் தபோபலம் இல்லாதவர்கள்...
உன் கருணையாலே எங்களை கண்ணனின் திருவடியில் நிரந்தரமாய் சேர்த்துவிடு…

வருவதை ஏற்றுக்கொள்...


ராதேக்ருஷ்ணா

நீ கேட்கும் சமயத்தில் கிடைப்பதில்லை....
சந்தர்ப்பம் வாய்க்கும் சமயத்தில் உனக்கு தேவையில்லை....
இது வாழ்வின் யதார்த்தம்...
ஒன்றை புரிந்துகொள்...
கண்ணன் உனக்குத் தன்னைத் தரவே இதையெல்லாம் செய்கிறான்...
அதனால் அப்படியே வருவதை ஏற்றுக்கொள்...
கண்ணன் தான் உனது வாழ்வின் ஒரே தேவை...
சரிதானே?!?

அவன் பொறுப்பு…


ராதேக்ருஷ்ணா

மனது சந்தோஷமா இல்லையா ???
அப்போது உன் மனதைக் கண்ணனிடம் கொடுத்துவிடு...
விடாமல் நாமஜபம் செய்...
சீக்கிரமே மனதில் சமாதானமும், சாந்தியும், நிம்மதியும், சந்தோஷமும் தானாக வரும்....
கலங்காதே குழந்தாய்....
உன் கண்ணன் உன்னை கைவிடான்....
பயப்படாதே செல்லமே...
உன் கண்ணன் உன்னோடுதான் இருக்கிறான்...
நீ இங்கே வந்தது கண்ணனால்....
அதனால் உன் வாழ்க்கை அவன் பொறுப்பு…

மோக்ஷம் தருவான்...


ராதேக்ருஷ்ணா

நீ பிறந்தது உன் கர்ம வினையாலே....
இனியும் பிறக்க ஆசைப்படாதே....
அப்படியே பிறந்தாலும் பக்தியைத் தவிர எதுவும் தெரியாத பிறவி அடையப் பிரார்த்திப்பாய்....
உன் கர்மவினையை கண்ணனுக்கு பூரணமாய் அர்ப்பணம் செய்துவிடு...
அவனே உனக்கு இந்த ஜன்மாவின் முடிவில் மோக்ஷம் தருவான்…

சந்தேகமில்லை….


ராதேக்ருஷ்ணா

நீ கண்ணனுக்காக உருகுகிறாயோ இல்லையோ, கண்ணன் உனக்காக உருகிக்கொண்டிருக்கிறான்....
அதனால் நிச்சயம் நீ உன் வாழ்வில் உருப்பட்டுவிடுவாய்...
அதில் எனக்கு துளியும் சந்தேகமில்லை….

அனுபவிப்பாய்…


ராதேக்ருஷ்ணா

உன்னால் க்ருஷ்ணனையே வசப்படுத்த முடியும்...
உன் மனதின் பலம் உனக்கே தெரியவில்லை...
உன் மனதால் நீ உன்னை வெல்லவேண்டும்...
அப்போது உனக்குத் தானாகவே உன் பலம் புரியும்...
உன் மனதை நீ வெல்ல க்ருஷ்ண நாமத்தை விடாமல் ஜபி....
மனதை நீ அறிவாய்...
உன்னையே நீ உணர்வாய்...
க்ருஷ்ணனை நீ அனுபவிப்பாய்…

Friday, September 11, 2015

விடியல் உன்னைத்தேடி வரும்…

ராதேக்ருஷ்ணா…

மனதிலே குழப்பமா...
நாம ஜபம் செய்...

வாழ்க்கையில் கலக்கமா...
நாம ஜபம் செய்...

பாதையில் பயமா...
நாம ஜபம் செய்...

எதிர்கால சிந்தனையா...
நாமஜபம் செய்...

கடந்தகால கவலையா...
நாமஜபம் செய்...

குடும்பத்தைப் பற்றி யோசனையா....
நாம ஜபம் செய்...

இழந்ததைப் பற்றி வருத்தமா....
நாம ஜபம் செய்....

வியாதியைப் பற்றி துக்கமா....
நாம ஜபம் செய்....

உனக்கு நாம ஜபமே கதி...
உன்னால் அது மட்டுமே முடியும்....
கலியில் அதுவே உபாயம்...

க்ருஷ்ணா என்று சொல்லிக்கொண்டு வாழ்ந்து விடு...
விடியல் உன்னைத்தேடி வரும்…

நாமஜபம் மட்டும் செய்….


ராதேக்ருஷ்ணா

உனது எல்லாத் தேவைகளையும் கவனித்துக் கொள்ள கண்ணன் என்றும் இருக்கிறான்....
அதனால் எதிர்காலத்தைப் பற்றி கவலையே வேண்டாம்....
உன் குடும்பத்தை இது நாள் வரை கண்ணனே கவனித்துக்கொள்கிறான்...
இனியும் அவனே தான் கவனிக்கப்போகிறான்...
அதனால் அந்தக் கவலையும் உனக்கில்லை...
உன் மோக்ஷமும் அவன் பொறுப்பு...
உன் பக்தி, ஞானம், வைராக்கியம் கண்ணனின் பொறுப்பு...
வேறு என்ன கவலை உனக்கு ???
நிம்மதியாய் நாமஜபம் மட்டும் செய்….

விளையாட காத்திருக்கிறது….


ராதேக்ருஷ்ணா

கண்ணனை மனதால் நினைத்தால், தானாகவே உலகின் எல்லா விஷயங்களும் புரியும்...
நாமஜபம் மட்டுமே உனக்கு அந்த பக்குவத்தைத் தரும்...
கண்ணனின் பால லீலையில் உன்னை இழப்பாய்....
நீயும் குழந்தை ஆகிவிடுவாய்....
கண்ணன் என்னும் குழந்தை உன்னோடு விளையாட காத்திருக்கிறது….

வாங்கிக்கொள்வான்…


ராதேக்ருஷ்ணா

நீ ஒவ்வொரு நாளும் செய்யும் நிவேதனத்தை, கண்ணன் மிகவும் ஆசையுடன், சிரத்தையுடன், கண்களில் ஆனந்தக்கண்ணீரோடு சாப்பிடுகிறான்...
ஒரு நாள் கூட இதுவரை நீ கொடுத்த எதிலும் கண்ணன் துளி குற்றமோ குறையோ கண்டதில்லை...
அதனால் ஒவ்வொரு நாளும் ஆசையோடு கண்ணனுக்குத் தா...
நிச்சயமாக ஒரு நாள் உன் கண்ணெதிரே வந்து அவன் நீ தருவதை நேராக வாங்கிக்கொள்வான்…

இனி எல்லாம் சுகமே….


ராதேக்ருஷ்ணா

மாடு மேய்க்கும் குலத்தின் தலையெழுத்தை மாற்ற, ஓரிரவில் அவர்களின் கோகுலத்தைத் தேடி வந்த அதே கோபாலன், உன் தலையெழுத்தையும், உன் குடும்பத்தின் தலையெழுத்தையும் மாற்ற சபதமெடுத்து கோகுலாஷ்டமி அன்று உன் வீட்டிற்கு வந்திருக்கிறான்...
அதனால் இனி எல்லாம் சுகமே….

Sunday, September 6, 2015

நன்னா பாத்துக்கணும்

ராதேக்ருஷ்ணா…

கிச்சா உன் வீட்டில் உள்ளே நுழைஞ்சு ஒளிஞ்சிண்டு இருக்கான்...
விடாமல் நாம ஜபம் பண்ணு...
கட்டாயம் உனக்குப் புரியும்....
கிச்சா ஆசையோட வந்திருக்கான்...
கிச்சா அழகா வந்திருக்கான்...
கிச்சா ஜோரா வந்திருக்கான்...
கிச்சா சமத்தா வந்திருக்கான்...
கிச்சா அமர்க்களமா வந்திருக்கான்...
கிச்சா நிறைய பக்தாளோட வந்திருக்கான்...
நாம ஜபம் பண்ணி அப்படியே அவனை உன் வீட்டில் வச்சுக்கோ...

கிச்சாவை நன்னா பாத்துக்கணும் சரியா…

Friday, September 4, 2015

கோகுலாஷ்டமி ஆசீர்வாதங்கள்...

ராதேக்ருஷ்ணா…

நாளை கண்ணனின் பிறந்த நாள்....
உள்ளம் கவர் கள்வனின் அவதார நாள்...
வெண்ணெய் திருடன் பூமிக்கு வந்த நாள்...
மாடு மேய்ப்பன் உனக்காக வரப்போகிறான்...
அகிலாண்ட கோடி ப்ரும்மாண்ட நாயகன் உன் வீட்டிற்கு வருகிறான்...
உன்னோடு உன் வீட்டில், உன் குடும்பத்தில் ஒருவனாக வசிக்க வருகிறான்...
தன்னுடன் பல மஹாத்மாக்களை உன் வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வருகிறான்....
இனி ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே...
விடிந்தால் கோகுலாஷ்டமி....

இனிய பக்திமயமான கோகுலாஷ்டமி ஆசீர்வாதங்கள்...
இனிய நாம ஜப க்ருஷ்ண ஜயந்தி ஆசீர்வாதங்கள்…


Thursday, September 3, 2015

தயாரா???

ராதேக்ருஷ்ணா…

உன் மனம் என்னும் வெண்ணெயைத் திருட கண்ணன் பார்த்துக்கொண்டிருக்கிறான்...

நீ க்ருஷ்ண நாம ஜபத்தில் மூழ்கியிருக்கும் சமயத்தில் உன் மனதைத் திருடி தன்னோடு வைத்திருக்க ஆசையாய் அலைகிறான்...
நீ விடாமல் ஜபி...
எதையும் யோசிக்காமல் ஜபி....
அவன் பிறந்தநாளன்று உன் மனதைத் திருட திட்டமிட்டிருக்கிறான்....

நீ தயாரா….

ஜோராக கொண்டாடப்போகிறாய்….


ராதேக்ருஷ்ணா

உன் கண்ணனின் பிறந்தநாளுக்கு யாரையெல்லாம் கூப்பிடனும் தெரியுமா ?!?
ஸ்வாமி இராமானுஜரை ஆசையாய் கூப்பிடு....
ஸ்ரீ ஆதிசங்கரரை உரிமையோடு கூப்பிடு...
ஆழ்வார்களை அன்போடு கூப்பிடு....
ஸ்ரீக்ருஷ்ண சைதன்யரை மறக்காமல் கூப்பிடு...
ஆண்டாள்,மீரா மாதா, ஜனா பாய், சக்குபாய், விடாமல் கூப்பிடு....
சந்த் ஞானதேவர், பக்த நாமதேவர், ஸ்ரீ துகாராம்,அழகாய் கூப்பிடு....
புரந்தரதாசர், அன்னமாச்சாரியார், ஸ்வாமி ராகவேந்திரா, எல்லோரையும் உள்ளன்போடு கூப்பிடு....
நாமஜபம் செய்....கட்டாயம் வருவார்கள்...
உன் வீட்டில் இந்த முறை ஸ்ரீ க்ருஷ்ணனின் பிறந்த நாளை ரொம்ப ஜோராக கொண்டாடப்போகிறாய்….

Wednesday, September 2, 2015

பிறந்த நாள் வருகிறது...


ராதேக்ருஷ்ணா

கண்ணன் உன்னோடு உன் வீட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறான்...
உன் கண்ணனின் பிறந்த நாள் வருகிறது...
கண்ணனுக்கு புதுத்துணி வாங்கியாச்சா?????
கண்ணனின் பிறந்த நாளன்று, அவனுக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டு....
கண்ணனின் பிறந்த நாளுக்கு, யாரையெல்லாம் கூப்பிடப்போகிறாய் ???
கண்ணனின் பிறந்த நாளுக்கு அவனுக்கு என்ன வேண்டும் என்று கேட்டாயா ???