Guru Vedham

Guru Vedham

Wednesday, April 29, 2015

காட்டிக்கொடுக்கிறான்…


ராதேக்ருஷ்ணா...
உன்னால் க்ருஷ்ணனை அனுபவிக்க முடியாதென்றால், சத்தியமாக க்ருஷ்ணனைப் பற்றிய அறிவே உனக்கு வராமலிருந்திருக்கும்... உன்னால் அவனை உணரவும், பார்க்கவும், அனுபவிக்கவும் முடியுமென்பதால் தான், அவனே உன்னிடம் நாமஜபமாக, சித்திரமாக, பாகவதமாக, கோவிலில் சிலையாக, குருவாக தன்னைக் காட்டிக்கொடுக்கிறான்…


க்ருஷ்ணனிடம் சரணடை…


ராதேக்ருஷ்ணா...
உன்னை நீயே வெல்வாய்...
உன்னை நீ வென்றால், உன் வாழ்க்கை உயரும்...
உன்னை நீ வென்றால், உலகே உனக்கு வசப்படும்...
உன்னை நீ வென்றால், எதையும் சமாளிக்கலாம்...
உன்னை நீ வெல்ல, நீ உடனே க்ருஷ்ணனிடம் சரணடை…


Beware

Radhekrishna

Don't ever think that you are too smart. Others are also thinking in many ways. So anyone can judge in which manner you are talking and behaving. Krishna is in everyone. So beware of your words and behavior. Krishnight and radhedreams...

புலம்பாதே



ராதேக்ருஷ்ணா...
மனிதர்கள் சுயநலமானவரே... நீ தான் உன்னைக் காத்துக்கொள்ள வேண்டும்... சும்மா புலம்பாதே. கண்ணன் உன்னுள் இருந்து சொல்வதை உள்ளபடி சிரத்தையோடு கேள்... அப்போது உன்னை, நீ சுயநலத்தில் பொய்யாய் பழகுபவரிடமிருந்து காத்துக்கொள்ளலாம்.

அடிமையில்லை..


ராதேக்ருஷ்ணா...
தலைகணத்தில் ஆடுபவரைக் கண்டு பயப்படாதே... உனக்குள் க்ருஷ்ணன் என்னும் அழியாத சக்தி என்றுமுள்ளது... எல்லோரையும் படைத்தது அவனே... அவனைத் தவிர வேறு ஒருவருக்கும் நாம் அடிமையில்லை..


உன்னை அறிவான்


ராதேக்ருஷ்ணா...
உன்னால் முடிந்ததை செய்.
சிரத்தையோடு செய்.
உனக்கு வேண்டியவர்களே ஆனாலும், அவர்களிடம் நன்றியை எதிர்பார்க்காதே.
உன்னைக் கொண்டாட வேண்டும் என்றும் எதிர்பார்க்காதே.
உன் கண்ணன் உன்னை அறிவான். நீ யாருக்கு என்ன செய்யவேண்டும் என்று தீர்மானிப்பது அவனே. அவனுக்கு உன்னைப் புரியும்.


அக்ஷயமான ஆசீர்வாதங்கள்..


ராதேக்ருஷ்ணா....
அளவில்லாத பக்தி உண்டாக ஆசீர்வாதங்கள்....
அளவிடமுடியாத க்ருஷ்ண அனுபவங்கள் கிடைக்க ஆசீர்வாதங்கள்...
அள்ள அள்ளக்குறையாத நாமஜபம் ஜபிக்க ஆசீர்வாதங்கள்...
அக்ஷயமாக உன்னை கண்ணன் அனுபவிக்க ஆசீர்வாதங்கள்....
அக்ஷயமான ஆசீர்வாதங்கள்..


ஹரியை மட்டும் அறி…


ராதேக்ருஷ்ணா

உன்னை நீ அறியாய்...
உலகை நீ அறியாய்...
உண்மை நீ அறியாய்...
ஏதும் நீ அறியாய்...
ஹரியே உன்னை அறிவான்...
ஹரியே உலகை அறிவான்...
ஹரியே உண்மை அறிவான்..
நீ ஹரியை மட்டும் அறி…


திருப்தியாக வாழக்கூடாதா??


ராதேக்ருஷ்ணா...

அதிருப்திக்கு ஆயிரம் காரணம் சொல்லலாம். திருப்தியாய் வாழ கோடி காரணங்கள் உண்டு. க்ருஷ்ணன் உனது திருப்திக்காக எத்தனை காரியங்கள் செய்கிறான் தெரியுமா ? அவனுடைய அந்தக் கருணைக்காகவாவது நீ திருப்தியாக வாழக்கூடாதா??


Tuesday, April 28, 2015

சொல்லித்தருவான்….


ராதேக்ருஷ்ணா....
நீ திரும்பத் திரும்ப உன்னால் முடியாது என்று சொல்லிக்கொண்டே இருந்தால், நிச்சயம் அப்படியே நடந்துவிடும். உன்னால் முடியாதென்றால், உன்னுள்ளே இருக்கும் உன் கண்ணனிடம் சரணாகதி அடை. அவன் உனக்கு எல்லாவற்றையும் அழகாக தெளிவாகச் சொல்லித்தருவான்….


உன்னால் முடியும்….


ராதேக்ருஷ்ணா...
உன்னால் முடியாதென்று யார் சொன்னது ? நீ தானே உன்னால் முடியாதென்று உன்னை ஒதுக்குகிறாய்...
கண்ணன் உன்னால் முடியுமென்று உன்னுள்ளே நம்பிக்கையோடு இருக்கிறான்...
உன்னால் முடியும்….


உன் நன்மைக்காகவே



ராதேக்ருஷ்ணா...
நீ நினைப்பது போல் எல்லாமே நடந்துவிட்டால், வாழ்வில் நீ முன்னேறுவது குறைந்துவிடும்...
உன் சிந்திக்கும் திறன் மழுங்கி விடும்...
உன் தன்னம்பிக்கை பலவீனமாகும்...
உன்னை பலசாலியாக்க, புத்திசாலியாக்க, திறமையுள்ளவராக்க, கண்ணனே உன் ஆசையெல்லாம் நடக்காமல் பார்த்துக்கொள்கிறான்....
கண்ணன் உன் நன்மைக்காகவே யோசிக்கிறான்

மன்மதன் வருகிறான்...


ராதேக்ருஷ்ணா...
மன்மதன் வருகிறான்...
ஆமாம். சாக்ஷாத் மன்மத மன்மதனான க்ருஷ்ணன் வருகிறான்... 
வருஷமாக வருகிறான்...
வர்ஷிக்க வருகிறான்...
ப்ரேமையில் உன்னை நனைக்க வருகிறான்...
உண்மையில் உன்னை காதலிக்கவருகிறான்...
காதலி உன் கண்ணனை காதலி....
அனுபவி உன் கண்ணனோடு வாழ்வை அனுபவி...
மன்மத வருஷ ஆசிர்வாதங்கள்...
மன்மத மன்மதனான கண்ணனின் அனுபவங்கள் தடையில்லாமல் கிடைக்க ஆசீர்வாதங்கள்..


ஏற்றுக்கொள்...


ராதேக்ருஷ்ணா...
ஒவ்வொரு நிகழ்வும் உன்னைப் பக்குவப்படுத்துகிறது. ஏற்றுக்கொள். புரிந்துகொள். உன்னை மாற்றிக்கொள்...
கண்ணன் உன்னை பலவிதமாக பலவிஷயத்தில் வளர்க்கிறான்…


தயாராக்கிக்கொள்....


ராதேக்ருஷ்ணா...

எல்லோரும் உன்னோடு ஒத்துப்போக எதிர்பார்க்காதே. எல்லோரிடமும் பார்த்துப் பழக நீ உன்னை தயாராக்கிக்கொள்....
கண்ணன் உனக்கு சிந்திக்கும் திறனை அழகாகக் கொடுத்திருக்கிறான். அதை உன் வாழ்க்கைக்கு ஒழுங்காக உபயோகப்படுத்துவது உன் வேலை…


உன் கைங்கர்யம்…


ராதேக்ருஷ்ணா...
உன் உடல் கண்ணனின் சொத்து....அதை ஜாக்கிரதையாக பாதுகாப்பது உன் பொறுப்பு....
உன் மனம் க்ருஷ்ணனின் அரண்மனை... அதை அழகாக வைத்திருப்பது உன் கடமை...
உன் வாழ்க்கை க்ருஷ்ணனின் இஷ்டம்...அதை நல்லபடி வாழ்வதே உன் கைங்கர்யம்…


க்ருஷ்ண க்ருபை


ராதேக்ருஷ்ணா

உன் புத்திசாதுர்யமாக உன் கண்ணனே இருக்கிறான்...
உன் மனோபலமாக உன் கண்ணனே இருக்கிறான்...
உன் நல்ல குணமாக உன் கண்ணனே இருக்கிறான்...
உன்னிடம் இருக்கும் எல்லா நல்லவையும் க்ருஷ்ண க்ருபையே….


உன்னோடு வாழ்கிறான்….


ராதேக்ருஷ்ணா...
உன் சந்தோஷத்தில் கண்ணன் சிரிக்கிறான்...
உன் துக்கத்தில் கண்ணன் அழுகிறான்....
உன் நிதானத்தில் கண்ணன்
நெகிழ்கிறான்....
உன் உற்சாகத்தில் கண்ணன் குதூகலிக்கிறான்....
உன் முயற்சியில் கண்ணன் சிலிர்க்கிறான்....
உன் வெற்றியில் கண்ணன் திளைக்கிறான்....
உன் தோல்வியில் கண்ணன் உதவுகிறான்....
உன் அவமானத்தில் கண்ணன் தாங்குகிறான்....
உன் பலவீனத்தில் கண்ணன் அரவணைக்கிறான்....
மொத்தத்தில் கண்ணன் உனக்காக வாழ்கிறான்...
உன்னோடு வாழ்கிறான்….


கண்ணனை கண்டுபிடி….


ராதேக்ருஷ்ணா....
உனது மனதிலே தான் உன் க்ருஷ்ணன் ஒளிந்துகொண்டிருக்கிறான்.
நாமஜபம் என்னும் எண்ணையில், சிரத்தை என்னும் திரியிட்டு, குரு என்னும் விளக்கைக் கொண்டு உன் கண்ணனை கண்டுபிடி….


நினைத்துக்கொண்டிருக்கிறான்...


ராதேக்ருஷ்ணா

உன்னை எப்போதுமே கண்ணன் ஆசையாய் பார்த்துக்கொண்டிருக்கிறான்..
உன்னை எப்போதுமே கண்ணன் ஆனந்தமாய் நினைத்துக்கொண்டிருக்கிறான்...
ஒரு நாளும் அவன் உன்னை வெறுத்ததில்லை.... நீயே துரத்தினாலும் உன்னை விட்டுவிட்டு அவன் போகப்போவதுமில்லை…