Guru Vedham

Guru Vedham

Tuesday, July 29, 2014

செல்லக்குழந்தை...


ராதேக்ருஷ்ணா 

மனது பாரமானால் வாழ்க்கை சுமையாகும். நீ சுமைதாங்கி அல்ல. நீ க்ருஷ்ணனின் செல்லக்குழந்தை. மனதை லேசாக வைத்துக்கொள். அப்பொழுது க்ருஷ்ணனை உணரலாம். மனது லேசாக இருக்க க்ருஷ்ணனிடம் மனதைக் கொடுத்துவிடு..


கண்டுபிடி...


ராதேக்ருஷ்ணா 

எல்லோரும் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று நினைக்க உனக்கு அதிகாரமில்லை. நீ எப்படி இருக்கவேண்டும் என்பதை மட்டும் முடிவுசெய். க்ருஷ்ணன் உன்னிடம் என்ன எதிர்பார்க்கிறான் என்பதைக் கண்டுபிடி. அவனிஷ்டப்படி வாழவே நீ இங்கே பிறந்திருக்கிறாய்..



Sunday, July 27, 2014

நன்றி சொல்…


ராதேக்ருஷ்ணா ...
எல்லாம் நன்மைக்கே ...
இதை மனதில் ஆழமாக பதித்து வை. அப்பொழுதுதான் க்ருஷ்ணன் உனக்கு செய்யும் அருள் உள்ளபடி புரியும். உனக்கு நடந்த எல்லா நிகழ்வுகளையும் நினைத்துப்பார். நிச்சயம் உனக்குப் புரியும். க்ருஷ்ணனுக்கு நன்றி சொல்

ராதேக்ருஷ்ணா 

திருப்தியாய் இரு…


ராதேக்ருஷ்ணா ...
நீ நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் உனக்கு அஹம்பாவம் அதிகமாகிவிடும். அதனால் நீதான் கஷ்டப்படுவாய். 
ஆகவே நீ நினைப்பது எல்லாம் நடக்காதிருப்பதே உனக்கு நல்லது.
க்ருஷ்ணன் உனக்கு எது நல்லதோ அதை மட்டும் தான் செய்கிறான். 
அதனால் திருப்தியாய் இரு

ராதேக்ருஷ்ணா 

கடமையை செய்...


ராதேக்ருஷ்ணா ...
உன் கடமையை நீ ஒழுங்காக செய்...
உலகம் என்ன வேண்டுமானாலும் நினைக்கட்டும்,,சொல்லட்டும் ...
உன் க்ருஷ்ணனுக்கு உன்னை நன்றாகத் தெரியும். 
க்ருஷ்ணன் உலகிற்கு உன்னை நிரூபிப்பான்

ராதேக்ருஷ்ணா 


அவன் செயல்..


ராதேக்ருஷ்ணா ...
சரணாகதி செய்வது உன் வேலை...
காப்பது க்ருஷ்ணனின் வேலை...
நாமஜபம் செய்வது உன் வேலை ...
வாழவைப்பது க்ருஷ்ணனின் வேலை...
பக்தி செய்வது உன் வேலை...
பக்குவப்படுத்துவது க்ருஷ்ணனின் வேலை...
கடமையைச் செய்வது உன் வேலை...
பலனளிப்பது க்ருஷ்ணனின் வேலை...
உன் வேலையை நீ செய்!
மற்றவை அவன் செயல்..

ராதேக்ருஷ்ணா …

க்ருஷ்ணன் வேண்டுமா??

ராதேக்ருஷ்ணா ...
க்ருஷ்ணனுக்கு உன் நேரத்தைத் தா...
க்ருஷ்ணனுக்கு உன் உடலைத் தா...
க்ருஷ்ணனுக்கு உன் மனதைத் தா...
க்ருஷ்ணனிடம் உன்னைத் தா...
இதையெல்லாம் தந்தால் உனக்கு என்ன கிடைக்கும்?
காதைத் தா...
ரஹஸ்யமாய் சொல்கிறேன் ...
க்ருஷ்ணன் உனக்குத் தன்னையே கொடுப்பான்...
க்ருஷ்ணன் வேண்டுமா?!?
 ராதேக்ருஷ்ணா …

கண்ணன் காத்திருக்கிறான் ...


ராதேக்ருஷ்ணா ...
இப்பொழுது பலர் க்ருஷ்ணனை ப்ருந்தாவனத்தில் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். நீயும் ப்ருந்தாவனத்தில் க்ருஷ்ணனை அனுபவிக்க வேண்டாமா ?!?
நேரம் கரைகின்றது ...
சீக்கிரம் நாமஜபம் செய்...
கண்ணன் காத்திருக்கிறான் ...
ராதிகாவின் ஆசீர்வாதம் பூரணமாய் இருக்கிறது ...
மீராமாதாவின் பக்தி நமக்கு உண்டாகட்டும் ...
ராதே ராதே

ராதேக்ருஷ்ணா 

Sunday, July 20, 2014

க்ருஷ்ணா என்று சொல்...


ராதேக்ருஷ்ணா 

எல்லாம் சில காலமே...
எல்லோரும் சில காலமே...
எதுவும் இங்கே நிலையில்லை ...
அதனால் யாரிடமும் வெறுப்பு வேண்டாம்...
எதைக்கொண்டும் அஹம்பாவம் வேண்டாம்...
எதற்கும் கவலைப்படாதே...
க்ருஷ்ணனை நினை...
க்ருஷ்ணா என்று சொல்...
க்ருஷ்ணனுக்காக வாழ்…



களி மண்...


ராதேக்ருஷ்ணா 

நாம் வெறும் களி மண்.
க்ருஷ்ணன் வாழ்க்கை என்னும் சக்கரத்தில் நம்மை சுற்றவைத்து,
அனுபவம் என்னும் தண்ணீர் விட்டு குழைத்து,
தன்னுடைய அன்பு மற்றும் அக்கரை என்னும் கைகளால் நம்மை பானையாக்கி,
குரு என்னும் அக்னியில் நம்மை சுடவைத்து / பக்குவப்படுத்தி,
பக்தி என்னும் பாலை அதில் ஊற்றி, பணிவு என்னும் சர்க்கரை கலந்து, பாகவதர்களிடம் நம்மை ஒப்படைக்கிறான் …

மனித முயற்சி...


ராதேக்ருஷ்ணா 

மனித முயற்சி இருந்தால்தான் தெய்வமும் உதவும். உன்னால் முடியும். க்ருஷ்ணன் உன் மேல் பூரணமாக நம்பிக்கை வைத்திருக்கிறான். அதனால் தான் உனக்கு புத்தி, உடல், புதிய சிந்தனை எல்லாம் தந்திருக்கிறான். நீ முயற்சி செய்யும்போது கண்ணன் உனக்கு விசேஷமாக அனுக்ரஹம் செய்வான்…




இனியொரு விதி செய்வோம்!


ராதேக்ருஷ்ணா 

எல்லாவற்றையும் விதி என்று சொல்லி சோம்பேறியாய் வாழாதே ...
விதியை மதியால் வெல்லலாம் … 
க்ருஷ்ணனிடம் சரணாகதி செய்தால், 
விதியை வெல்லும் மதி தானாய் வரும்...
இனியொரு விதி செய்வோம்!


கலங்காதே..


ராதேக்ருஷ்ணா 

அமைதியாய் இரு...
நிதானமாய் இரு...
பல தடைகள் கடந்து வாழ்ந்து விட்டாய்...
இனியும் வாழ்க்கையில் எல்லாம் கடந்து போகும்...
கலங்காதே...நடுங்காதே...
க்ருஷ்ணன் இருக்கான்...
நீ நன்றாகவே இருப்பாய் ...
இது சத்தியம்…

Tuesday, July 15, 2014

க்ருஷ்ணனின் சாம்ராஜ்ஜியத்தில் …


ராதேக்ருஷ்ணா ...
தவறுகள் மன்னிக்கப்படுகின்றது...
பாவங்கள் மறக்கப்படுகின்றது...
அன்பு என்றும் மதிக்கப்படுகின்றது ...
நல்ல நம்பிக்கை 
விதைக்கப்படுகின்றது...
வாழ்க்கை புதிய பாதையில்
வழிநடத்தப்படுகின்றது...
இவை அனைத்தும் நடப்பது க்ருஷ்ணனின் சாம்ராஜ்ஜியத்தில் …

ராதேக்ருஷ்ணா …

கண்ணன் நடத்துகிறான்…


ராதேக்ருஷ்ணா ...
நேற்றைய வாழ்க்கை முடிந்தது ...
இன்றைய வாழ்க்கை கடந்தது ...
நாளைய வாழ்க்கை நல்லது ...
புதிய நம்பிக்கை வை...
புதிய முயற்சி செய்...
புதிய எண்ணங்கள் கொள்...
புதிய பலம் கொண்டு எழு...
புதிய பரிமாணத்தில் பார்...
புதிய தைரியம் பெறு...
புதிய உற்சாகத்துடன் வாழ்...
உலகமெல்லாம் வசப்படும்...
கண்ணனும் வசப்படுவான்...
கண்ணன் வழி நடத்துகிறான்…

ராதேக்ருஷ்ணா …

Sunday, July 13, 2014

அன்பே நிலையானது...



ராதேக்ருஷ்ணா ...
எந்த சமயத்திலும் ஜாக்கிரதையாகப் பேசு...
எத்தனை உரிமை இருந்தாலும்கூட யார் மனமும் நோகும்படியாகப் பேசாதே...
யார் மனதை எது காயப்படுத்தும் என்று யாரும் அறியார்...
நிலையில்லாத வாழ்வில் அன்பே நிலையானது...
க்ருஷ்ணன் எல்லோரையும் நேசிப்பது போலே நீயும் யாவரையும் நேசி..

ராதேக்ருஷ்ணா …

Saturday, July 12, 2014

நம்பிக்கை கொள்...

ராதேக்ருஷ்ணா ...
உன்னால் முடியாதது எதுவுமில்லை ...
உன்னால் முடியும் ...
கண்ணன் உன்னோடு என்றுமிருக்க பிரச்சினைகள் உன்னை என்ன செய்துவிடமுடியும் ?
கண்ணன் என்றும் உன்னுடன் இருக்க துன்பங்கள் உன்னைத் தாக்குமோ ?
மனதை அவநம்பிக்கையில் பயணிக்க விடாதே...
நம்பிக்கை கொள்...
கண்ணனையே கட்டமுடியுமென்றால் வாழ்வதா இங்கே கஷ்டம் ?
கண்ணனின் கருணை உன்னைக் காக்கும்!
ராதேக்ருஷ்ணா ...

அன்பு

ராதேக்ருஷ்ணா ...
அன்பு தான் உலகில் என்றும் நிரந்தரம்...
அதைத்தான் கண்ணன் நமக்குத் தருகிறான் ...
அந்த அன்பை நாம் பலரோடு பகிர்ந்துகொண்டால்
அது தானாய் வளரும் ...
அன்புக்கு கண்ணனே அடிமை. எல்லோரையும் அன்போடு பார்...எல்லோரிடமும் அன்பைப் பகிர்ந்துகொள் ...
கண்ணன் உன்னைக் கொண்டாடுவான் ...
ராதேக்ருஷ்ணா ...