Guru Vedham

Guru Vedham

Sunday, August 31, 2014

ஒத்துழை...


ராதேக்ருஷ்ணா ...

தீர்மானமாய் இரு.
உன் வாழ்வின் ஒவ்வொரு நிமிஷத்தையும் க்ருஷ்ணன் அழகாகவும் அற்புதமாகவும் செதுக்குகிறான். நீ முழுமையாக ஒத்துழைப்பு தந்தால் போதும். நீயே அசந்துபோகும்படி உன் வாழ்க்கை அமர்க்களமாக இருக்கும்...உன் வளர்ச்சிக்காக க்ருஷ்ணனோடு ஒத்துழை...

Saturday, August 30, 2014

துணிந்து நில்...


ராதேக்ருஷ்ணா ...

அஞ்சாதே . துணிந்து நில்...
உன் மனதில் சரியென்று தோன்றாதவரை எந்த விஷயத்திலும் அவசரமாய் முடிவு எடுக்காதே. உன் உள்ளே க்ருஷ்ணன் இருந்து உனக்குத் தெளிவாக வழி காட்டுகிறான். அதுவே உள்ளுணர்வு. அது உன்னை ஒரு நாளும் தவறான பாதையில் அழைத்துச்செல்லாது...

க்ருஷ்ணார்ப்பணம்!


ராதேக்ருஷ்ணா ...
அடுத்தவருக்கு தர வேண்டிய மரியாதையை நீ சரியாக தந்துவிடு. அவர்கள் அதை அலட்சியம் செய்தாலும் கவலைப்படாதே. கிடைக்கும் மரியாதையை இழப்பது அவர்களுக்குதான் நஷ்டம். க்ருஷ்ணார்ப்பணம் என்று சொல்லி எல்லோருக்கும் மரியாதையை செய். காலம் மற்றவருக்கு உன்னைப் புரியவைக்கும். 

Tuesday, August 26, 2014

புரிந்துகொள்...


ராதேக்ருஷ்ணா ...

க்ருஷ்ணன் ஆசீர்வதிக்கிறான்! பெற்றுக்கொள்...
க்ருஷ்ணன் எல்லாம் தருகிறான்!
வாங்கிக்கொள்...
க்ருஷ்ணன் சொல்லித்தருகிறான்! கற்றுக்கொள்...
க்ருஷ்ணன் வழிகாட்டுகிறான்! நடந்துகொள்...
க்ருஷ்ணன் கூட இருக்கிறான்! புரிந்துகொள்...

புதிய பாதை...


ராதேக்ருஷ்ணா ...

உன் மனது என்றும் இளமையானது. அதனால் உன்னுடைய உற்சாகம் ஒரு நாளும் குறையாது. அதுவே உன் பலம். அதனால் எப்பொழுது வேண்டுமானாலும் புதியதாக சிந்தனை செய்து, புதிய லட்சியத்தை அடைய உன்னால் நிச்சயம் முடியும். க்ருஷ்ணன் கையைப் பிடித்துக்கொண்டு புதிய பாதையில் செல்....

Sunday, August 24, 2014

கடமைகளை செய்...


ராதேக்ருஷ்ணா ...

அமைதியாய் உன் கடமைகளை ஆசையோடு செய். காலம் உனக்குறிய மரியாதையயும், உயர்வையும் நிச்சயமாகத் தரும். உன் உழைப்பும் முயற்சியும் கண்ணனுக்கு நன்றாகத் தெரியும். நீ க்ருஷ்ணனை நம்பி உன் கடமைகளை செய்...

உறுதி வேண்டும்...


ராதேக்ருஷ்ணா ...

மனதில் உறுதி வேண்டும்...
நம்பிக்கையில் உறுதி வேண்டும்...
நாம ஜபத்தில் உறுதி வேண்டும்...
குரு வார்த்தையில் உறுதி வேண்டும்...
க்ருஷ்ண பக்தியில் உறுதி வேண்டும்...
உழைப்பில் உறுதி வேண்டும்...
விடாமுயற்சியில் உறுதி வேண்டும்...
பொறுமையில் உறுதி வேண்டும்...

முயற்சி திருவினையாக்கும்...


ராதேக்ருஷ்ணா ...

முயற்சி இல்லாதவர் செல்லாக்காசு. முயற்சி செய்து தோல்வி அடைந்தால் நஷ்டமோ கேவலமோ இல்லை. முயலாதவருக்கு தெய்வம் அருள் செய்தும் பயனில்லை. முயற்சியே உன் வாழ்வின் அளவுகோல். முயல்பவருக்கே க்ருஷ்ணன் விசேஷ உதவிகள் செய்கிறான். முயற்சி திருவினையாக்கும்...

கற்றுக்கொள்


ராதேக்ருஷ்ணா ...

நீ எல்லோரிடமிருந்தும் என்றும் கற்றுக்கொள்ளத் தயாராக இரு. எதுவும் தெரியாதவர் எவருமில்லை. உலகமும் வாழ்க்கையும் நிறைய கற்றுக்கொடுக்கிறது. க்ருஷ்ணன் எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளவே உன்னை இங்கே அனுப்பியிருக்கிறார். ஆசையாய் ஆர்வமாய் கற்றுக்கொள்.

Thursday, August 21, 2014

உன் பலம்...


ராதேக்ருஷ்ணா ...

நீ அனாவசியமாக உனது சக்தியை வீணடித்துவிட்டு வாழ்வின் மீதும், உலகின் மீதும், மற்றவர் மீதும் வீண் பழி போடுகிறாய். உன்னுள் ஒளிந்துகொண்டிருக்கும் எல்லையற்ற சக்தியை உணர்ந்துகொள். க்ருஷ்ணனிடம் நம்பிக்கை வைத்துப் பார்...உன் பலம் உனக்குப் புரியும்...
க்ருஷ்ணனையே கட்டும் பலம் உனக்குண்டு...

பணக்காரனாயிரு...


ராதேக்ருஷ்ணா ...

நீ பல சந்தர்ப்பங்களில் மனதினால் ஏழையாக இருக்கிறாய். அதனால் தான் பல நேரங்களில் பகவான் க்ருஷ்ணனின் அருளை அனுபவிக்காமலிருக்கிறாய். நம்பிக்கையில் பணக்காரனாயிரு...
நாம ஜபத்தில் பணக்காரணாயிரு...
பக்தியில் பணக்காரனாயிரு...
மனதில் நம்பிக்கை குறைவுள்ளவரே ஏழை...

Thursday, August 14, 2014

பக்தி பரிமளிக்கட்டும்...


ராதேக்ருஷ்ணா ...

குழப்பங்கள் தீரட்டும்...
நம்பிக்கை வளரட்டும்...
வியாதிகள் மாறட்டும்...
பலம் கூடட்டும்...
சந்தேகங்கள் அழியட்டும்...
சாந்தி நிறையட்டும்...
சண்டை முடியட்டும்...
அன்பு பொழியட்டும்...
மனம் மாறட்டும்...
தெளிவு பிறக்கட்டும்...
பக்தி பரிமளிக்கட்டும்...
நாம ஜபம் பெருகட்டும்...
க்ருஷ்ண தரிசனம் கிடைக்கட்டும்...
வாழ்க்கை உன்னதமாகட்டும்...



வெற்றி உனக்கே..


ராதேக்ருஷ்ணா ...

துன்பங்கள், கஷ்டங்கள்,பிரச்சினைகள், வியாதிகள், அவமானங்கள் இவை எதற்கும் உன்னை ஜெயிக்கும் சக்தியில்லை. நீ இவை எல்லாவற்றையும் க்ருஷ்ணனின் அருளால் வெல்வது நிச்சயம். புதிய நம்பிக்கையோடு மீண்டும் மீண்டும் முயற்சி செய். கண்ணன் என்னும் சாரதி உன் வாழ்வென்னும் தேரை ஓட்டுகிறான். வெற்றி உனக்கே..

Wednesday, August 13, 2014

க்ருஷ்ணனின் அந்தப்புரம்

ராதேக்ருஷ்ணா ...

தேவையில்லாததை எல்லாம் கொட்டி வைக்க உன் மனம் குப்பைத்தொட்டி அல்ல. உன் மனம் க்ருஷ்ணனின் அந்தப்புரம். அங்கே எல்லோருக்கும் இடமில்லை. க்ருஷ்ணனுக்கு பிடித்தவையும், பிடித்தவரும் மட்டும்தான் அங்கே இருக்கலாம். அப்போதுதான் உனக்கு ஆனந்தம்,நிம்மதி எல்லாம் புரியும்....



Monday, August 11, 2014

கண்ணன் மாற்றித்தருவான்


ராதேக்ருஷ்ணா ...

உன்னால் விடமுடியாத கெட்ட பழக்கமோ, வேண்டாத விஷயமோ இவ்வுலகில் எதுவுமில்லை.
மனித மனது உலகில் மிகப் பலமான ஆயுதம். இதை நினைவில் வை. நிச்சயமாக உன்னால் உன்னை மாற்றமுடியும்.
கண்ணனிடம் கதறி அழு.
அவன் உன்னை மாற்றித்தருவான். முயற்சி செய்.
நாம ஜபத்தால் முடியாதது எதுவுமில்லை...


விடாமல் ஜபி


ராதேக்ருஷ்ணா ...

யார் எப்படி நடந்து கொண்டாலும், நீ நிதானமாகவும், தெளிவாகவும் இருந்தால் துன்பமில்லை. நம்மை நாம் மாற்றிக்கொண்டால்தான் இங்கே நிம்மதியாக வாழமுடியும்.
க்ருஷ்ணா என்று விடாமல் ஜபி.
அப்பொழுது நீ மாறவேண்டிய முறை தானாகவே புரியும்.


பயத்தை விடு


ராதேக்ருஷ்ணா ...

எது வந்தாலும் எதிர்கொள்.
என்ன ஆகிவிடும் நமக்கு?
ஒரு கை பார்த்துவிடு ...
பயந்து பயந்து இழந்ததெல்லாம் போதும்.
பயத்தால் அடைந்தது ஒன்றுமில்லை.
தைரியமாக வாழ்ந்து பார்.
பயம் உன்னிடம் மண்டியிடும்.
கண்ணனை நினை.
க்ருஷ்ணா என்று சொல்.
தைரியம் தானாய் வரும்...

கற்றுக்கொடுப்பவன் கண்ணன்


ராதேக்ருஷ்ணா ...

யார் நல்லது சொன்னாலும் எடுத்துக்கொள். உலகில் உள்ள ஒவ்வொரு பொருளும், ஒவ்வொரு ஜீவனும் உனக்கு நிறைய விஷயங்களை சொல்லித்தருகின்றன. கற்றுக்கொடுப்பவன் கண்ணன் என்கிற எண்ணம் இருந்தால் போதும்.

அகம்பாவமே வேண்டாம்...


ராதேக்ருஷ்ணா ...


உன்னிடம் உள்ள விசேஷமான திறமையெல்லாம் பகவானின் கருணையே!
உனக்கு அகம்பாவம் வராத வரை உன்னுடைய விசேஷமான திறமை உனக்கு நன்மையே செய்யும்.
அஹம்பாவம் வந்தால் அந்த திறமையே உனக்கு நீங்காத துன்பத்தைத் தரும்.
அதனால் அகம்பாவமே வேண்டாம்...
க்ருஷ்ண க்ருபையை உணர்..

Wednesday, August 6, 2014

அர்ப்பணித்து விடு...


ராதேக்ருஷ்ணா ...

எதையெல்லாம் தொலைத்தாயோ, எதையெல்லாம் இழந்தாயோ, அதையெல்லாம் க்ருஷ்ணனுக்கு அர்ப்பணித்து விடு... அவையெல்லாவற்றையும் க்ருஷ்ணனே உரிமையோடு உன்னிடமிருந்து எடுத்துக்கொண்டான் என்று நினை...
மனதில் சமாதானம் வரும்...
கொடுத்தவனே எடுத்துக்கொண்டான் என்று இரு...

Monday, August 4, 2014

உன்னால் முடியும்


ராதேக்ருஷ்ணா ...

புதைத்தாலும் முளைக்கிறது விதை...
வெட்டினாலும் துளிர்க்கிறது மரம்...
பறித்தாலும் வாசம் வீசுகிறது மலர்...
விழுந்தாலும் எழுகிறது குழந்தை...
உன்னால் முடியும்...நம்பு...
நி வெறுத்தாலும் உன்னை நேசிக்கும் க்ருஷ்ணன் இருக்க, 
உன்னால் எல்லாம் முடியும் ...எதுவும் முடியும்...


Sunday, August 3, 2014

பொறுமையாக இரு...


ராதேக்ருஷ்ணா ...

பொறுமையாக இரு.
அவசரப்பட்டு யாரையும் தவறாக எடை போடாதே.
எல்லோருக்குள்ளும் ஒரு நல்ல மனமுண்டு.
உன் நல்ல எண்ணங்களால் யாரையும் மாற்றமுடியும்.
உலகம் அழகான கூடு.
நாமெல்லாம் ஒரு கூட்டுப் பறவைகள் ...
க்ருஷ்ணன் என்னும் மரத்தில் நாம் வாழ்கிறோம் ...

Friday, August 1, 2014

க்ருஷ்ண பக்தி


ராதேக்ருஷ்ணா ...

பக்குவம் வரும். வந்தே தீரும்...
காலம் உன்னையும் கரையேற்றும்...
பலவிதமான மனிதர்கள் மூலமாய் நாம் நம்மை அறிகிறோம் ...
ஒவ்வொரு மனிதரும் வினோதம்...க்ருஷ்ண பக்தி உனக்கு
 எல்லா மனிதரையும் புரியவைக்கும்..


க்ருஷ்ணன் தெரிவான் .


ராதேக்ருஷ்ணா ...

யாரையும் ஒதுக்காதே...
யாரையும் அவமதிக்காதே...
யாரையும் வெறுக்காதே...
எல்லோரிடமும் ஒரு எல்லையைத் தாண்டாமல் பழகும்
 வரை யாராலும் உனக்குத் தொந்தரவில்லை.
உன்னாலும் யாருக்கும் தொந்தரவில்லை.
வாழ்க்கை மிகப்பெரிய பொக்கிஷம் ... 
மனதின் கோப தாபங்களில் வாழ்வை பொசுக்கிவிடாதே....
எல்லோரையும் நேசித்துப் பார்....
க்ருஷ்ணன் தெரிவான்
 .

காத்திரு...


ராதேக்ருஷ்ணா ...
ஆண்டாள் சொன்னாள்...
"வாயினால் பாடி மனதினால் சிந்திக்க"...
ஆசையாய் க்ருஷ்ணா என்று பாடு... அன்போடு கண்ணனை நினை...
மற்றவை அவன் பாடு...
நீ சுகித்திரு...
அவனுக்காகப் பசித்திரு...
கண்ணனுக்காகக் காத்திரு...