Guru Vedham

Guru Vedham

Saturday, May 31, 2014

க்ருஷ்ணனின் கோட்பாடு...

ராதேக்ருஷ்ணா 


குறை இல்லாத மனிதரில்லை ...
குறைகளை மட்டும் கவனிப்பவர் மனிதரேயில்லை...

ரோஜாவின் செடியில் முட்களை மட்டும் பார்ப்பவன் குறை( கூறும் ) மனிதன்...

முள்ளையும் மலரையும் பார்ப்பவன் அரை மனிதன்...

மலரை மட்டுமே பார்ப்பவன் முக்கால் மனிதன்...

முள்தான் ரோஜாச் செடிக்கு வேலி...அதுவே மலருக்கு காவல் என்று உணர்ந்து முள்ளை வெறுக்காமல், மலரை அனுபவிப்பவன் பக்குவமாக முழு மனிதன்...

இதுவே க்ருஷ்ணனின் கோட்பாடு...
இனி உன் பாடு…


ராதேக்ருஷ்ணா 


உன்னை வெல்...


ராதேக்ருஷ்ணா ...


உன் பயத்தை வெல்வாய்...
உன் கோபத்தை வெல்வாய்...
உன் குழப்பத்தை வெல்வாய்...
உன் சந்தேகத்தை வெல்வாய்.
உன் பொறாமையை வெல்வாய்...
உன் அவசரத்தை வெல்வாய்..
உன் காமத்தை வெல்வாய்...
உன்னை நீ வெல்வாய் ...

க்ருஷ்ணனின் கருணையினால் நிச்சயம் உன்னால் உன்னை வெல்லமுடியும்...

உன்னை வென்று பார்...
உலகமும் உனக்கு வசப்படும்…


ராதேக்ருஷ்ணா …

நிம்மதி நிரந்தரம்…

ராதேக்ருஷ்ணா


முதலும் அறிந்தவன் க்ருஷ்ணன்...
முடிவும் அறிந்தவன் க்ருஷ்ணன்...
முழுதும் அறிந்தவன் க்ருஷ்ணன்...
உன்னை அறிந்தவன் க்ருஷ்ணன்...
உலகை அறிந்தவன் க்ருஷ்ணன்...
வாழ்வை அறிந்தவன் க்ருஷ்ணன்...
எல்லாம் அறிந்த க்ருஷ்ணனே
நமக்கு கதி...
அவனிடம் சரணாகதி செய்...
எல்லாம் அவன் செயல்...
எல்லாம் அவன் பார்த்துப்பான்...
க்ருஷ்ணனே நம் பாதுகாவலன்...
க்ருஷ்ணனே நம் சேவகன்...

உன்னோடு க்ருஷ்ணனிருக்க நிம்மதி மட்டுமே என்றும் நிரந்தரம்…


ராதேக்ருஷ்ணா

நம்பிக்கையோடு இரு…


ராதேக்ருஷ்ணா ...

கணவனால் கைவிடப்பட்ட பெண்களுண்டு ...
மனைவியால் கைவிடப்பட்ட
ஆண்களுண்டு ...
பெற்றோரால் கைவிடப்பட்ட
குழந்தைகளுண்டு ...
குழந்தைகளால் கைவிடப்பட்ட
பெற்றோருண்டு ...
நண்பர்களால் கைவிடப்பட்ட
மனிதருண்டு ...
சகோதர/சகோதரிகளால் கைவிடப்பட்ட
சகோதர/சகோதரிகளுண்டு ...
குடும்பத்தாரால் கைவிடப்பட்ட
சொந்தபந்தங்களுண்டு...
இதுபோல் பல உண்டு...

ஆனால் ...
க்ருஷ்ணனால் கைவிடப்பட்டவர்
என்று எங்கும் யாருமில்லை...
அதனால் நம்பிக்கையோடு இரு…


ராதேக்ருஷ்ணா …

Tuesday, May 27, 2014

ராதே..ராதே..

ராதேக்ருஷ்ணா...

ஜோராய் சொல்லு..
ராதே.. ராதே..
அழகாய் சொல்லு..
ராதே.. ராதே..
அன்பாய் சொல்லு..
ராதே.. ராதே..
ஆசையாய் சொல்லு..
ராதே.. ராதே..
இங்கேயும் சொல்லு..
ராதே.. ராதே..
அங்கேயும் சொல்லு..
ராதே.. ராதே..
எங்கேயும் சொல்லு..
ராதே.. ராதே..
இப்பவும் சொல்லு..
ராதே.. ராதே..
எப்பவும் சொல்லு..
ராதே.. ராதே..
பாடிண்டு சொல்லு..
ராதே.. ராதே..
ஆடிண்டு சொல்லு..
ராதே.. ராதே..

ராதே..ராதே..
கண்ணன் வறான் ....
ராதே..ராதே..
அன்பைத் தறான்....

ராதே..ராதே..ராதே..ராதே..
ராதே..ராதே..ராதே..ராதே..
ராதே..ராதே..ராதே..ராதே..
ராதே..ராதே..ராதே..ராதே..

ராதேக்ருஷ்ணா...
 

க்ருஷ்ண பக்தி

ராதேக்ருஷ்ணா...

மனதில் பதற்றம் வந்தால் வாழ்வில் சுகம் ஏதுமில்லை...
மனதில் பக்தி வந்தால் ஒரு நாளும் பதற்றமேயில்லை...
பக்தி உன் உயிர் தோழன்/தோழி...
பக்தி உன்னை தோல்வியில் துவண்டு போகாமல் காக்கும்..
பக்தி உன்னை அவமானத்தில்
நொந்து போகவிடாமல் காக்கும்...
பக்தி உன்னை கஷ்டத்தில் அவநம்பிக்கை வராமல் காக்கும்...
பக்தி உனது உன்னத சொத்து..
க்ருஷ்ண பக்தி செய்து,
கிருஷ்ணனின் சொத்தாகிவிடு...

ராதேக்ருஷ்ணா...
 

Sunday, May 25, 2014

ஆனந்தமாய் இரு..


ராதேக்ருஷ்ணா

க்ருஷ்ணனுக்கு உன்னை ரொம்பவும் பிடிக்கும் ...
க்ருஷ்ணனுக்கு உன் மேல் அக்கறை அதிகம்...
க்ருஷ்ணன் உன் சந்தோஷத்தை ரசிக்கிறான்...
க்ருஷ்ணன் உன் வெற்றியை கொண்டாடுகிறான்...
க்ருஷ்ணன் உன் தோல்வியில் உன்னைத் தாங்குகிறான்...
க்ருஷ்ணன் உன்னுள்ளே உன் கூடவே இருக்கிறான்...
அதனால் ஆனந்தமாய் இரு..

ராதேக்ருஷ்ணா ..

வீணடித்துவிடாதே...…


ராதேக்ருஷ்ணா ...

அன்புடன் இரு.
ஆனால் அதற்காக எடுப்பார் கைப்பிள்ளையாய் ஆகிவிடாதே...
உதவி செய்.
ஆனால் அதற்காக உன் வாழ்க்கையை இழந்துவிடாதே...
கருணையோடு இரு.
ஆனால் அதற்காக உன் சுயமரியாதையை விட்டுவிடாதே...
பொறுமையாக இரு.
ஆனால் அதற்காக உன் உரிமையை விட்டுக்கொடுக்காதே...

நீ, உன் உடல், உன் நேரம், உன் பலம்,
உன் சொத்து,உன் அறிவு,உன் வாழ்க்கை ...

இவை எல்லாம் க்ருஷ்ணன் உனக்குத் தந்த வரம்......வீணடித்துவிடாதே...…


ராதேக்ருஷ்ணா …


நம்பினார் கெடுவதில்லை…

ராதேக்ருஷ்ணா



ஜோஸியர்களை விட உன் எதிர்காலத்தை நன்றாய் அறிந்தவன் க்ருஷ்ணன்.
உன் ஜாதகத்தைக் கணிப்பதற்கு முன்பே உனக்கு அருள் செய்தவன் க்ருஷ்ணன்.
உன் நட்சத்திரத்தை விட ரொம்ப பெரியவன் க்ருஷ்ணன்.
உன் கைரேகையை விட உன் தலைமேல் இருக்கும் க்ருஷ்ணனின் கை பலமானது.
உன் ராசியை யோசிக்காமல் க்ருஷ்ணனை உனக்கு ராசியாக்கிக்கொள்.
நீ எதையும் பார்க்கவேண்டாம்...
நீ எதையும் யோசிக்கவே வேண்டாம்....
க்ருஷ்ணனை மட்டும் நம்பு...
க்ருஷ்ணனை மட்டும் யோசி..
நம்பினார் கெடுவதில்லை…


ராதேக்ருஷ்ணா

Wednesday, May 21, 2014

வாசுதேவ குடும்பம்...


ராதேக்ருஷ்ணா...

நீ யாரோ... நான் யாரோ...
என் பேர் நீ அறியாய் ...
உன் பேர் நான் அறியேன் ...
நீ எங்கோ இருக்கிறாய்...
நான் எங்கோ இருக்கிறேன்...

ஆனால் ஒரு தொடர்பு உனக்கும் எனக்கும் உண்டு...
அது க்ருஷ்ணன் ...

அதனால் நீயும் நானும் சொந்தமே ...
உலகில் நாம் அனைவரும் ஒரு குடும்பமே...
வாசுதேவ குடும்பமே...

என்றும் இது சத்தியம்…

ராதேக்ருஷ்ணா...

என் மனது உன்னிடம்


ராதேக்ருஷ்ணா...


க்ருஷ்ணா ...
கோபத்தில் என் மனது நிதானமாக இருப்பதாக...
க்ருஷ்ணா ...
காமத்தில் என் மனது
சிக்காமல் இருப்பதாக...
க்ருஷ்ணா ...
குழப்பத்தில் என் மனது
கலங்காதிருப்பதாக...
க்ருஷ்ணா ...
கஷ்டத்தில் என் மனது
திடமாயிருப்பதாக...
க்ருஷ்ணா ...
வியாதியில் என் மனது
பலமாயிருப்பதாக...
க்ருஷ்ணா ...
வெற்றியில் என் மனது
வினயத்தோடு இருப்பதாக...
க்ருஷ்ணா ...
என்றும் என் மனது
உன்னிடத்தில் ஈடுபாட்டோடு இருப்பதாக...

ராதேக்ருஷ்ணா ...

சந்தோஷமாயிரு.


ராதேக்ருஷ்ணா...

க்ருஷ்ணன் உன்னோடு இருக்கிறான்.
க்ருஷ்ணன் உன்னைப் பார்க்கிறான்.
க்ருஷ்ணன் உன் பிரார்த்தனையை கேட்கிறான்.
க்ருஷ்ணன் உன் மனதோடு பேசுகிறான்.
க்ருஷ்ணன் உன்னோடு வாழ்கிறான்.
அதனால் சந்தோஷமாயிரு.

ராதேக்ருஷ்ணா

Sunday, May 18, 2014

பக்தர் வீண்போனதில்லை.


ராதேக்ருஷ்ணா

நம்பினார் கெடுவதில்லை.
ஜபித்தார் தோற்பதில்லை.
பிரார்த்தித்தார் வீழ்வதில்லை.
பொறுத்தார் இழந்ததில்லை.
முயற்சித்தார் அழிவதில்லை.
பக்தர் வீண்போனதில்லை.

ராதேக்ருஷ்ணா…

தைரியமாக வாழ்...


ராதேக்ருஷ்ணா.

கர்ப்பத்தில் காத்த பகவான்
இன்று வரை காத்தான்.
இன்று வரை காத்த பகவான் நாளையும் காப்பான்.
நாளை காக்கும் பகவான் இந்த மாதமும் காப்பான்.
இந்த மாதம் காப்பவன் இந்த வருடம் முழுதும் காப்பான்.
இந்த வருடம் காப்பவன் இந்த வாழ்க்கை முழுதும் காப்பான்.
அதனால் தெம்போடு, நம்பிக்கையோடு,
தைரியமாக வாழ்...

ஆனந்தமாயிரு..


ராதேக்ருஷ்ணா


எல்லாவற்றையும் விட்டுவிட்டு க்ருஷ்ணனிடம் சரணாகதி செய்...
எதைப்பற்றியும் கவலைப்படாதே...
குழந்தையாய் நிம்மதியாக வாழ்.
உன் வாழ்வின் எல்லாப் பொறுப்பும் க்ருஷ்ணனுக்கே...
ஆனந்தமாயிரு..

ராதேக்ருஷ்ணா

Wednesday, May 14, 2014

நரசிம்மா...


ராதேக்ருஷ்ணா

நரசிம்மா...

ப்ரோதஷ நேரத்தில் அவதரித்தவனே...
ப்ரஹ்லாதனின் நெஞ்சில்
நிறைந்தவனே...

கம்பத்திலிருந்து பிறந்தவனே...
கர்ஜிக்கும் நரசிங்கனே...

அஹோபில மைந்தனே...
அற்புத நகம் கொண்ட அன்பனே ...

என்னை உன்னிடம் தந்தேன்...

என் அஹம்பாவத்தைக் கிழித்துப் போடு...
என் காமத்தைக் கிழித்துப் போடு...
என் கோபத்தைக் கிழித்துப் போடு...
என் ஆசையைக் கிழித்துப் போடு...
என் பாசத்தைக் கிழித்துப் போடு...
என் பொய்யை கிழித்துப் போடு...
என் பயத்தைக் கிழித்துப் போடு...

எனக்குள் இருக்கும் எல்லா இரண்யகசிபுவையும் கிழித்து,
உன் ப்ரஹ்லாதனாக என்னை மாற்றி,
உன் பிறந்தநாள் பரிசாக என்னை ஏற்றுக்கொள்...

அடியேன் ராமானுஜ தாசன்…

ராதேக்ருஷ்ணா

நாம ஜபம் செய்...


ராதேக்ருஷ்ணா

நாம ஜபம் செய்.
எங்கேயும் நாம ஜபம் செய்.
எப்போதும் நாம ஜபம் செய்.
வெற்றியோ, தோல்வியோ
விடாது நாம ஜபம் செய்...
லாபமோ, நஷ்டமோ 
நாம ஜபம் செய்...
கவலையோ, சந்தோஷமோ,
நாம ஜபம் செய்...
பெருமையோ, அவமானமோ,
நாம ஜபம் செய்...
பாவமோ, புண்ணியமோ,
நாம ஜபம் செய்...
நல்லதோ, கெட்டதோ,
நாம ஜபம் செய்...
நாம ஜபம்...இதுவே நமக்கு கலியுகத்தில் கதி…

ராதேக்ருஷ்ணா 

வாழ்க்கையை வாழ்...


ராதேக்ருஷ்ணா 

வாழ்க்கையை ரசி...
வாழ்க்கையை மதி...
வாழ்க்கையை அனுபவி...
வாழ்க்கையை புரிந்துகொள்...
வாழ்க்கையை உபயோகி...
வாழ்க்கையைக் கொண்டாடு...
வாழ்க்கையை வாழ்...

ராதேக்ருஷ்ணா

Sunday, May 11, 2014

பொறுமையாக இரு...

ராதேக்ருஷ்ணா ...

பக்தி செய்வது நம் கடமை .
அருள் செய்வது க்ருஷ்ணனின் கடமை .

உன் கடமையை நீ ஒழுங்காக செய்.
அவன் கடமையை அவன் நிறைவாக செய்வான்.

பொறுமையாக இரு.
காலம் எல்லாவற்றையும் மாற்றும் .

ராதேக்ருஷ்ணா ...

பக்தர் தோற்பதில்லை…

ராதேக்ருஷ்ணா


கலங்காதே ... திடமாயிரு...
குழம்பாதே .... தெளிவாயிரு ...
பயப்படாதே ... தைரியமாயிரு...
உன்னோடு கண்ணன் உண்டு...
உறுதியாயிரு ...
பொறுமையாயிரு...
வெல்வது நிச்சயம் ...
பக்தர் தோற்பதில்லை


ராதேக்ருஷ்ணா

கண்ணனின் அந்தப்புரம் !!!

ராதேக்ருஷ்ணா


மனமே வாழ்வின் ரஹஸ்யம்.
மனமே பக்தியின் ஆதாரம்.
மனமே வெற்றியின் படி.
மனமே உன்னுடைய பலம்.
மனமே உன் சொத்து.
மனமே க்ருஷ்ண பிரசாதம்.
மனதை யாரிடமும் தராதே.
உன் மனமே கண்ணனின் அந்தப்புரம் !!!


ராதேக்ருஷ்ணா...

நிம்மதியாயிரு...


ராதேக்ருஷ்ணா...

கவலைப்படுவதால் கஷ்டங்கள் 
முடியப்போவதில்லை ...
புலம்புவதால் பிரச்சினைகள் 
தீரப்போவதில்லை ...

வருவதை எதிர் கொள்...
வருவதை ஏற்றுக்கொள்...

நடந்ததும், நடப்பதும்,
நடக்கப்போவதும் கண்ணனுக்குத்
தெரியும்...

கண்ணன் நம்மைக் காப்பான் .
அதனால் நிம்மதியாயிரு...

ராதேக்ருஷ்ணா ...