Guru Vedham

Guru Vedham

Tuesday, July 28, 2015

உன் விட்டலன்….


ராதேக்ருஷ்ணா….

இந்த ஏகாதசிக்காகவே காத்திருந்தான் விட்டலன்...
இதோ தன்னை மறந்து, தன் பக்தர்களின் பஜனையில் பண்டரீபுரத்தில் வீதிவீதியாக திரிந்துகொண்டிருக்கிறான்...
நீயும் பஜனை செய் இப்போது....
உனக்கும் வருவான் உன் விட்டலன்….

விட்டலன் என்னும் விடியல்

ராதேக்ருஷ்ணா….

ராம் க்ருஷ்ண ஹரி....
வாசுதேவ ஹரி....

விடிஞ்சா ஆஷாட சுக்ல ஏகாதசி....
உனக்கும் வியாதியிலிருந்து விடியல்...
உனக்கும் பிரச்சனைகளிலிருந்து விடியல்....
உனக்கும் கர்ம வினையிலிருந்து விடியல்....
உனக்கும் கஷ்டங்களிலிருந்து விடியல்....
உன் குடும்பத்துக்கு ஆனந்த விடியல்...
உன் வம்சத்திற்கு பக்தி விடியல்...
உன் ஜன்மாவிற்கு ஞான வைராக்கிய விடியல்....
விட்டலன் என்னும் விடியல் உனக்காகக் காத்திருக்கிறது….

உன் அருகில்…

ராதேக்ருஷ்ணா....
ராம் க்ருஷ்ண ஹரி....
வாசுதேவ ஹரி....

சந்திரபாகா நதிக்கரையில் கூட்டம் கூட்டமாய் பக்தஜனங்கள்....
அந்தக் கூட்டத்தில் தானும் ஒருவனாய் பாண்டுரங்கன்....

எத்தனையோ பக்த ஜனங்கள் ஆஷாட சுக்ல ஏகாதசிக்காக நடந்து நடந்து பண்டரீபுரம் போகும் பாதையில் களைத்துப் படுத்திருக்கிறார்கள்...
அவர்களின் பாதங்களை பிடித்து இப்போது இதம் தருகிறான் இன்னொரு விட்டலன்....

உன்னையும் நினைத்து, உனக்காக ஒரு விட்டலன், இப்போது உன் அருகில்…

Monday, July 27, 2015

விட்டலனின் குழந்தைகள்...


ராதேக்ருஷ்ணா….

நானும், நீயும் என்றுமே விட்டலனின் குழந்தைகள்...
உன்னையும், என்னையும், நம்மையும் காப்பாத்தவே விட்டலன் இருக்கான்....
ஆனந்தமாய் குழந்தையாய் விட்டலனை நினைத்து வாழ்ந்து விடலாம்…

கிளம்பு... பண்டரீபுரம் போகலாம்…

ராதேக்ருஷ்ணா….

உன்னை நினைத்துக் கொண்டு பாண்டுரங்கன் நிற்கிறான்...
ஒரு நாள் நீ வருவாய் என...

உனக்காக வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கிறாள் ருக்குமாயி மாதா....

உனக்கு அருள் செய்ய...

உன்னோடு விளையாட துடிப்போடு ஏங்குகிறாள்... சந்திரபாகா மாதா....
உனக்கு ஆனந்தத்தை அள்ளி வழங்க பண்டரீபுரம் தயாராயிருக்கிறது...
கிளம்பு...
பண்டரீபுரம் போகலாம்…

கலங்காதிரு…

ராதேக்ருஷ்ணா....
ராம் க்ருஷ்ண ஹரி...
வாசுதேவ ஹரி...

வாழ்க்கை என்னும் கடலில், விட்டலன் என்னும் படகோட்டி, பக்தி என்னும் படகில், குரு என்னும் துடுப்பைக் கொண்டு, உன்னை கரையேற்றுவான்...
என் குழந்தையே கலங்காதிரு…

காணக் காத்திருக்கிறான்

ராதேக்ருஷ்ணா....
ராம் க்ருஷ்ண ஹரி...
வாசுதேவ ஹரி...

எங்கே நடந்தாலும், எதற்காக நடந்தாலும், விட்டலனைப் பார்க்க, பண்டரீபுரத்திற்கு நடக்கின்றேன் என்று நினைத்துக்கொள்....
அப்படி நினைத்தால் ???

முதலில் நினை...
பிறகு புரியும்....

விட்டலன்...உன்னைக் காணக் காத்திருக்கிறான்

வெல்வாய்….

ராதேக்ருஷ்ணா...
ராம் க்ருஷ்ண ஹரி...
வாசுதேவ ஹரி....

உன்னுடைய எல்லா நஷ்டமும், பிரச்சனையும், கஷ்டமும் இடுப்பளவே...
இதை உனக்குப் புரியவைக்கவே விட்டலன் இடுப்பில் கை வைத்து செங்கல் மேலே பண்டரீபுரத்தில் நிற்கிறான்...
அவனை நினை...
இடுப்பளவு கஷ்டங்களையும், பிரச்சனைகளையும் சமாளித்து நீ வெல்வாய்….

முயற்சி செய்வாய்….


ராதேக்ருஷ்ணா….

யாரும் எதையும் ஒழுங்காக உள்ளபடி அறிவதில்லை...
அவரவர் மனதிற்கு தகுந்தாற்போல் அர்த்தம் செய்துகொள்கிறார்...
க்ருஷ்ணனே எல்லோரையும், எல்லாவற்றையும் உள்ளபடி அறிவான்...
நீ அவனை அறியவும், உணரவும், அனுபவிக்கவும், முயற்சி செய்வாய்….

எது சுகம் ???


ராதேக்ருஷ்ணா….

மனதில் உன்னைப் பற்றியே நினைத்திருந்தால், க்ருஷ்ணனை மறப்பாய்...
மனதில் க்ருஷ்ணனைப் பற்றியே நினைத்திருந்தால், உன்னை மறப்பாய்...
நீ சொல்...
இதில் எது சுகம் ???

Saturday, July 18, 2015

உனக்கென்ன குறைச்சல்?

ராதேக்ருஷ்ணா….

உன்னை எப்போதும் ஒரு ஜோடி கண்கள் கவனித்துக்கொண்டிருக்கின்றன...அது உன் கண்ணனின் கண்கள்...

உன் பெயரை ஒரு வாய் எப்போதும் உச்சரித்துக்கொண்டே இருக்கிறது...
அது உன் கண்ணனின் வாய்....

ஒரு கை எப்போதும் உன் தலையில் ஆசீர்வாதம் செய்துகொண்டிருக்கிறது...
அது உன் கண்ணனின் கை...

உனக்காக ஒரு இதயம் எப்போதும் துடித்துக்கொண்டிருக்கிறது....அது உன் கண்ணனின் இதயம்...
உனக்கென்ன குறைச்சல்….

Friday, July 17, 2015

தர்மத்தின் தலைவன்...


ராதேக்ருஷ்ணா

தன்னை சரணடைந்தவர் எவராயினும், அவரைக் காப்பது க்ருஷ்ணனின் தர்மம்....
அவனல்லவா தர்மத்தின் தலைவன்...
உனக்கு அந்த
தலைவனிருக்கிறான்...
கலங்காதே…

வைத்தியன்


ராதேக்ருஷ்ணா….

உன் மனதை நீ அறிவாய்...
அதில் தான் ஆயிரத்தெட்டு பிரச்சனைகள்....
அடுத்தவரிடம் உள்ள குறைகளை சரி செய்வதை விட்டுவிட்டு, உன் மனதை சரி செய்யும் வழியைப்பார்...
க்ருஷ்ணனிடம் பிரார்த்தனை செய்...
உன் மனதை சரி செய்யும் ஒரே வைத்தியன் அவனே…

க்ருஷ்ணனோடு பேசு…


ராதேக்ருஷ்ணா

மனிதரிடம் புலம்புவதால் ஒரு லாபமில்லை....
நாமஜபத்தைப் புலம்பினால் யாரிடமும் ஒன்றுமே புலம்பவேண்டாம்...
உன் புலம்பலை யாரும் இங்கே ரசிப்பதில்லை....
மனதில் இருக்கும் க்ருஷ்ணனோடு பேசு…

விடாமல் ஜபி

ராதேக்ருஷ்ணா….

உன் நாவை நீ அடக்காவிட்டால், மற்றவரின் நாக்கு உன்னை அடக்கும்....
உன் பொறாமையை நீ கொல்லாவிட்டால், அது உன் வாழ்வை கொல்லும்...
உன் தற்பெருமையை நீ வளர்த்தால், அது உனது உண்மையான மரியாதையை கெடுக்கும்....
உன் ஆசைக்கு நீ அடிபணிந்தால், அது உன்னை அடுத்தவருக்கு அடிமையாக்கிவிடும்...
உன் அஹம்பாவத்தை நீ வெல்லாவிட்டால், அது உன்னை மற்றவரிடம் தோற்கவைக்கும்...
பகவான் க்ருஷ்ணனின் திருவடியைப் பிடித்தால், நீ யாரிடமும் எதையும் யாசிக்கவே வேண்டாம்...
பகவானின் நாமத்தை நீ விடாமல் ஜபித்தால், நீ யமன் தலையிலும் கால் வைக்கலாம்….

சுலபமான பாடம்…


ராதேக்ருஷ்ணா….

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக யோசிப்பர்....ஒவ்வொருவர் உள்ளிருந்தும் யோசிக்க வைப்பது கண்ணனே... ஒவ்வொருத்தர் மூலமாக கண்ணனே உனக்கு பல விஷயத்தைச் சொல்லிக்கொடுக்கிறான்...
நீ கஷ்டப்படாமல் கற்றுக்கொள்... அடுத்தவரின் அனுபவம் சுலபமான பாடம்…

புரியவைப்பான்….


ராதேக்ருஷ்ணா….

மற்றவர்கள் உன்னை அவமதிப்பதால், நீ தாழ்வதில்லை....
உன்னை அவர்கள் மதிப்பதில்லை என்று தெரிந்தபின்னும், அவர்களிடம் மரியாதையை எதிர்பார்த்து, உன்னை அவர்களுக்கு புரியவைக்க முயற்சிப்பதனாலேயே, நீ தாழ்ந்துபோகிறாய்....
உன் அவமானம் உன் க்ருஷ்ணனின் அவமானம் என்று விட்டுவிடு....
க்ருஷ்ணன் உன் பலத்தையும், மதிப்பையும் உலகிற்கு புரியவைப்பான்….

ரசிக்கிறான்…


ராதேக்ருஷ்ணா….

எதையும் எதிர்பார்க்காமல் நீ உன் கடமையை க்ருஷ்ணனுக்காகச் செய்...கண்ணன் உன்னை அறிவான்...
அவன் உன் கடமையையும், உன் சிரத்தையையும் உன்னிப்பாக ரசிக்கிறான்…

வாழ்க்கையே சுகம்


ராதேக்ருஷ்ணா….


தடையெல்லாம் தடையல்ல...
பிரச்சனையெல்லாம் பிரச்சனையல்ல...
க்ருஷ்ணனை நினைத்தால், க்ருஷ்ணனைப் பிடித்தால்,
க்ருஷ்ணனே கதி என்றிருந்தால், அர்த்தமே வேறு தான்...
வாழ்க்கையே சுகம் தான்…

தைரியமாய் ஜபி…


ராதேக்ருஷ்ணா....
உன் காமம், உன் கோபம், உன் பயம், உன் சந்தேகம், உன் விதி எல்லாவற்றையும் மாற்றும் பலம் உன் க்ருஷ்ணனுக்கு உண்டு...உன்னை மாற்றித்தருவது உன் க்ருஷ்ணனின் பொறுப்பு…
நீ நாமத்தை தைரியமாய் ஜபி…

எழுந்து வருவாய்….


ராதேக்ருஷ்ணா….

நீ எத்தனையோ இழந்ததற்காக புலம்புகிறாயே????
இன்று வரை நீ க்ருஷ்ணனை இழக்கவில்லையே...
அது ஏன் இன்னும் உனக்கு புரியவில்லை....???
இழந்ததை நினைத்து அழுது புலம்பி வாழ்வை அசிங்கப்படுத்தினது போதுமே...
இனியாவது க்ருஷ்ணன் இருக்கிறான் என்று துள்ளி எழுந்து வருவாய்….

நாமத்தின் மேல் சத்தியம்…


ராதேக்ருஷ்ணா....
உன் உள்ளம் எங்கே அலைந்தாலும், உன் உதடுகள் மட்டும் எப்போதும் "க்ருஷ்ணா" என்று கூறிக்கொண்டே இருக்கட்டும்....
நிச்சயமாக பகவானுடைய நாமஜபம் உன் மனதை அலையாமல் நிறுத்தி, உன்னுள் க்ருஷ்ணனை உனக்குக் காட்டும்...
இது க்ருஷ்ண நாமத்தின் மேல் சத்தியம்…

காத்திருக்கிறான் !!!


ராதேக்ருஷ்ணா

ப்ருந்தாவனத்தினிலே, யமுனா தீரத்திலே,
குழல் ஊதிக்கொண்டு,
உனக்காக ஒரு நீல நிற அழகன் பல்லாயிரம் வருஷமாகக் காத்திருக்கிறான் !!!
என்று நீ அவனிடம் செல்லப்போகிறாய் ???

குருவின் வார்த்தையிலே நந்தலாலா...


ராதேக்ருஷ்ணா

பூக்கும் பூவிலெல்லாம் நந்தலாலா...
உந்தன் வாசமெல்லாம் வீசுதடா நந்தலாலா...
உண்ணும் உணவிலெல்லாம் நந்தலாலா...
உந்தன் சுவையே மிஞ்சுதடா நந்தலாலா...
மழலையின் மொழியிலெல்லாம் நந்தலாலா...
உந்தன் குரல்தான் ஒலிக்குதடா நந்தலாலா...
குருவின் வார்த்தையிலே
நந்தலாலா...
உந்தன் கீதை கேட்குதடா நந்தலாலா…

நந்தலாலா…


ராதேக்ருஷ்ணா….

கொட்டும் மழையிலெல்லாம்
நந்தலாலா...
உந்தன் கருணை தெரியுதடா நந்தலாலா...
ஒவ்வொரு பிரச்சனையிலும் நந்தலாலா...
உந்தன் பிரேமை புரியுதடா நந்தலாலா...
ஒவ்வொரு இரவினிலும் நந்தலாலா...
நிந்தன் அரவணைப்பு சிலிர்க்குதடா நந்தலாலா...
ஒவ்வொரு விழிப்பினிலும் நந்தலாலா...
உந்தன் உரிமை உசுப்புதடா நந்தலாலா…

Wednesday, July 1, 2015

இன்பத்திலே…


ராதேக்ருஷ்ணா

க்ருஷ்ணன் உன் தோழன்...
க்ருஷ்ணன் உன் தலைவன்..
க்ருஷ்ணன் உன் சேவகன்...
க்ருஷ்ணன் உன் பாதுகாவலன்...
க்ருஷ்ணன் உன் சொத்து...
வேறு என்ன வேண்டும் உலகத்திலே???
இந்த நினைவு போதும் மனதினிலே...
வாழ்க்கை செல்லும் இன்பத்திலே…

க்ருஷ்ணா என்று சொல்


ராதேக்ருஷ்ணா...
பகவானின் நாமத்தைப் போல், நமக்கு வேறு ஒரு நல்ல நண்பரோ, சொந்தக்காரரோ, நலம் விரும்பியோ, என்றுமே இல்லை...
அதனால் க்ருஷ்ணா என்று சொல்லிக்கொண்டே இரு... அதில் என்ன கஷ்டம் இருக்கிறது???
உன் வாழ்வை "க்ருஷ்ணா" என்னும் நாமத்தை நம்பி கொடுத்துப்பார்….புரியும்