Guru Vedham

Guru Vedham

Saturday, December 27, 2014

புண்டலீக வரதா... ஹரி விட்டலா..


ராதேக்ருஷ்ணா 

விட்டலன் உன் மனதையே பார்க்கிறான்...
உனக்கு உலகத்தில் பக்தி செய்யும் முறைகள் பற்றி எதுவுமே தெரியவோ, புரியவோ வேண்டாம்...
வெறுமனே விடாமல் நாமஜபம் செய்...
நீ எந்த விதமான பக்தி செய்யவேண்டும் என்பதை விட்டலன் தீர்மானிக்கட்டும்...
புண்டலீக வரதா...
ஹரி விட்டலா..

உனக்காகவே நிற்கிறான்…


ராதேக்ருஷ்ணா 

புண்டலீக வரதா..ஹரி விட்டலா...
விட்டலனைத் தொடுவாய் ...
நீ எந்த ஜாதியாய் இருந்தாலும் விட்டலனைத் தொடலாம் ...
நீ எந்தக் குலமாய் இருந்தாலும் விட்டலனைத் தொடலாம்...
நீ தொட்டால் அவன் சுகப்படுவான்....
வா...ஓடி வா...
உடனே வா...
பண்டரீபுரம் வா...
வா...பரப்ரும்மத்தைத் தொடலாம் வா...
பாண்டுரங்கனைத் தொடலாம் வா...
உனக்காகவே விட்டலன் இடுப்பில் கைவைத்து காத்துக்கொண்டு செங்கல்லின் மீது நிற்கிறான்…

Friday, December 26, 2014

குருவே சரணம்....


ராதேக்ருஷ்ணா 


உன் குருவிடம் உன்னை ஒப்படை....
உன் குருவிடம் நம்பிக்கை வை...
உன் குரு சொல்படி அப்படியே நட...
உன் குரு உன்னை க்ருஷ்ணனின் சொத்தாக்கவே உன்னைப் பக்குவப்படுத்துகிறார்....
குருவே சரணம்….

குறையில்லாமல் நடத்துவான்…


ராதேக்ருஷ்ணா 

கண்ணன் உன் மீது வைத்திருக்கும் நம்பிக்கை ஒரு நாளும் குறையப்போவதில்லை.
கண்ணன் உன் மீது வைத்திருக்கும் அன்பு ஒரு நாளும் குறையப்போவதில்லை...
கண்ணன் உனக்கு செய்யும் அருளும் ஒரு நாளும் குறையப்போவதில்லை...
கண்ணனோடு உன் பந்தமும் ஒரு நாளும் அழியப்போவதில்லை...
கண்ணனோ குறை ஒன்றும் இல்லாதவன்...
அதனால் உன் வாழ்வையும் குறையில்லாமல் நடத்துவான்…

Thursday, December 25, 2014

உன் வீடு….


ராதேக்ருஷ்ணா 

கிளம்பத் தயாராயிரு...
பகவான் க்ருஷ்ணன் "இப்பொழுது உடனே வா வைகுந்தம் போகலாம்" என்று சொன்னால் உடனே கிளம்பத் தயாராயிரு....
உன் கடமைகளை சிரத்தையோடு செய்துகொண்டிரு...
ஆனால் வைகுந்தம் செல்ல எப்போதும் தயாராயிரு...
க்ருஷ்ணனைத் தவிர வேறு யார்மீதும் அபிமானம் வேண்டாம்...
வைகுந்தம் உனக்காக ரொம்ப நாளாகக் காத்திருக்கிறது....
வைகுந்தமே உன் வீடு….


கண்ணனை நினை…


ராதேக்ருஷ்ணா ….

கண்ணன் நினைத்தால் எரிமலையும் குளிருமே ...
கண்ணன் நினைத்தால் கவலைகள் தீருமே ...
கண்ணன் நினைத்தால்
விதியும் மாறுமே ...
கண்ணன் நினைத்தால்
எல்லாம் நடக்குமே...
கண்ணன் நினைத்தால் வாழ்வை வெல்லலாமே...
அதனால் கண்ணனை நினை…

பக்த ஜாதி....

ராதேக்ருஷ்ணா ….

பகவான் க்ருஷ்ணன் உன் மனதைத் தான் பார்க்கிறான்...
நீ எந்த ஜாதி என்று க்ருஷ்ணன் பார்ப்பதில்லை...
நீ என்றுமே பக்த ஜாதி....


விசேஷ அனுக்ரஹம்


ராதேக்ருஷ்ணா 

இப்போது உன் தலை மீது உனக்குப் பிடித்த மஹாத்மாவின் (ஸ்வாமி இராமானுஜர், ஆதிசங்கரர், ஸ்வாமி ராகவேந்திரர், க்ருஷ்ண சைதன்ய மஹாப்ரபு) கைகள் இருப்பதாக பாவித்துக்கொள்...
இப்பொழுது அழகாக நிதானமாய் நாமஜபம் செய்... பகவான் க்ருஷ்ணன் விசேஷ அனுக்ரஹம் செய்வான்...
வாயினால் நாமத்தைப் பாடி மனதினால் மஹாத்மாவை நினை….

நிம்மதி நிச்சயமுண்டு…


ராதேக்ருஷ்ணா 

நினைப்பது ஒன்று...
நடப்பது ஒன்று...
ஆனால் ஏதோ நல்ல காரணம் அதில் உண்டு.
நிச்சயம் க்ருஷ்ணன் உன்னோடு என்றுமுண்டு....
அதனால் உன் வாழ்வில் நிம்மதி நிச்சயமுண்டு…

எப்போதும் நீ....


ராதேக்ருஷ்ணா 

க்ருஷ்ணனின் கண் பார்வை எப்போதும் உன் மீது....
க்ருஷ்ணனின் காதுகள் எப்போதும் உன் வார்த்தைக்காக....
க்ருஷ்ணனின் கைகள் எப்போதும் உனக்கு அருள் செய்ய....
க்ருஷ்ணனின் கால்கள் எப்போதும் உனக்காக ஓடி வர...
க்ருஷ்ணனின் மனது என்றும் உன்னிடம் அன்போடு...
க்ருஷ்ணனின் சிந்தனையில் என்றும் எப்போதும் நீ….

Saturday, December 13, 2014

கவலைப்படாதே....


ராதேக்ருஷ்ணா 

சில சந்தர்ப்பங்களில் நீ செய்யும் நல்ல விஷயங்களை எல்லாம் சிலர் தான் செய்தது போல் உலகத்திற்கு சொல்லி வீண் பெருமை அடைவார்கள்... கவலைப்படாதே....
க்ருஷ்ணன் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறான்...
காலத்தே அவன், உன் உழைப்பை, நீ செய்த நல்லதை உலகிற்கு நிச்சயம் தெரிவிப்பான்....இது அவன் மீது சத்தியம்…

ரஹஸ்யமாய் தந்துவிடு....

ராதேக்ருஷ்ணா ….

நீ ஒரு முடிவில் தெளிவாக இருந்தால் யாரும் உன்னை மாற்ற முடியாது. உன் மனதை மற்றவர் மாற்றிவிட்டார் என்று பழி சொல்லாதே...உன் மனதை பலமாகவும் ஜாக்கிரதையாகவும் வைத்துக்கொள்வது உன் கடமை....உன் மனதைத் தெளிவாக வைத்துக்கொள்ள க்ருஷ்ணனிடம் அதை ரஹஸ்யமாய் தந்துவிடு....


இனி ஒரு விதி செய்வோம்…


ராதேக்ருஷ்ணா ….


இனி ஒரு பக்தி செய்வோம்...
இனி ஒரு தைரியம் பெறுவோம்...
இனி புதியதாய் நாமஜபம் செய்வோம்....
இனி விடாமல் க்ருஷ்ணனை அனுபவிப்போம்...
இனி பாரதி சொன்னது போல் இனி ஒரு விதி செய்வோம்…


பாரதத்தின் ரசிகன்….


ராதேக்ருஷ்ணா ….

பாரதத்தின் தலையெழுத்தை தன் பாட்டினால் மாற்றிய பாரதியின் கையெழுத்து....
கையெழுத்திலும் கம்பீரம்.....
கை எழுத்திலும் கவித்துவம்...
பாரதி என்னும் பாரதத்தின் ரசிகன்….

திருவாளன்

ராதேக்ருஷ்ணா …

இன்று நம் பாரதியாரின் பிறந்தநாள்....
முறுக்கு மீசை கவிஞன்....
முண்டாசு கட்டிய புலவன்...
பாரதத்தாய் பெற்ற வீரன்...
கண்ணனையும் சேவகனாய் பார்த்த பக்தன்...
தீராத சுதந்திரதாகப் பிரியன்...
ஜாதியை எதிர்த்த பிராம்மணன்....
பெண் விடுதலையைப் பேசிய பெரியவன்...
தன் வீட்டை மறந்து நாட்டை நேசித்த நல்லவன்....

பாரதி....பாமரனையும் ரசிகனாக்கிய திருவாளன்

ஆனந்தத்தின் சுரங்கம்...


ராதேக்ருஷ்ணா ….

நீ ஆனந்தத்தின் சுரங்கம்...
க்ருஷ்ணனே உன்னுள் இருக்கும் ஆனந்தப் புதையல்...
அதனால் உன்னுள் இருந்தே உனக்கு ஆனந்தத்தை உன் க்ருஷ்ணன் தருகிறான்...
அதனால் உன் ஆனந்தம் ஒரு நாளும் குறைய வாய்ப்பேயில்லை...
அதனால் இனி எதைப்பற்றியும் துக்கம் வேண்டாம்…

.உனக்காக பக்தி செய்…


ராதேக்ருஷ்ணா ….

பக்தியை நீ உனக்காக உன் திருப்திக்காகச் செய்கிறாய்....
அடுத்தவர் உன்னை பெருமையாக நினைப்பதற்காகச் செய்தால், அது வெளிவேஷம்....உன்னுள் உறையும் உன் க்ருஷ்ணனுக்கும் உனக்கும் உள்ள வர்ணிக்கமுடியாத, விளம்பரம் செய்யமுடியாத, ஓர் உன்னத அனுபவமே பக்தி....உனக்காக பக்தி செய்…

உயர்ந்த பக்தர்


ராதேக்ருஷ்ணா ….


உலகில் பிரசித்தமான பக்தர்கள் மட்டுமே உயர்ந்த பக்தர் என்று எண்ணிவிடாதே... யார் உயர்ந்த பக்தர் என்பதை கண்ணன் தான் முடிவுசெய்யவேண்டும்... உன் பக்தி மற்றவரை விட சிறந்ததா என்று யாரோடும் ஒப்பிட்டு பெருமைப்படாதே...க்ருஷ்ணன் உன்னை அனுபவிப்பதே உயர்ந்த பக்தி….

நினைவில் கொள்….


ராதேக்ருஷ்ணா ….

ஒரு எறும்பால் வாழ்வில் தைரியமாக போராடி வாழமுடியுமென்றால் ஆறரிவு கொண்ட உன்னால் தைரியமாக ஜெயிக்கமுடியாதோ ???
க்ருஷ்ணன் உன்னை மனிதனாக சக்தியோடு படைத்திருக்கிறான் என்பதை நினைவில் கொள்….

க்ருஷ்ண க்ருபை


ராதேக்ருஷ்ணா 

உன்னுடைய பேச்சு அல்லது செயல்கள் முட்டாள்தனமானது என்று பலரும் கிண்டல் செய்தாலும், நீ பேசாமல், செய்யாமல் இருக்காதே...யாரும் உலகில் பிறவி மேதாவிகள் இல்லை...க்ருஷ்ணன் உனக்கும் யோசிக்கும் திறனை தந்திருக்கிறான்....
கற்றுக்கொள்... உன்னால் முடியும் நம்பு...
உன் விடாமுயற்சியும், க்ருஷ்ண க்ருபையும் நிச்சயமாக உன்னை மாற்றித்தரும்….

நல்லதே செய்கிறான்…


ராதேக்ருஷ்ணா ….

100% உன் முயற்சியை செய். அதன் பலன் வெற்றியோ தோல்வியோ எதுவாயினும் அப்படியே ஏற்றுக்கொள்..க்ருஷ்ணன் உனக்கு நல்லதே செய்கிறான்…

மாற்றிக்கொள் ....

ராதேக்ருஷ்ணா ....
உன்னை மாற்றிக்கொள் ....
வரட்டுப் பிடிவாதம் வேண்டாம்....
க்ருஷ்ணன் நல்லதே செய்கிறான்...

குருஜீ கோபாலவல்லி தாசரின் 1 நிமிட சத்சங்கம் கேளுங்கள். ...

Radhekrishna. ....
Be flexible. ...
River is bending & flowing ....
Give up your adamant nature...

1 minute sathsangam in tamil by GURUJI GOPALAVALLIDASAR. ..
Click this link to listen

அழகாகக் காக்கிறான் ....

ராதேக்ருஷ்ணா ....
நீ பசிக்கு ஆகாரம் சாப்பிடுகிறாய்....
ஆனால் நீ சாப்பிடும் ஆகாரத்திலிருந்து கண்ணிற்கு பார்க்கும் சக்தியையும், காதுக்கு கேட்கும் சக்தியையும், கைகளுக்கு வேலை செய்யும் சக்தியையும், கால்களுக்கு நடக்கும் சக்தியையும் தந்து உன் உடலைக் காக்கும் க்ருஷ்ணன், உன் வாழ்க்கையையும் அதுபோல் அழகாகக் காக்கிறான் ....

குருஜீ கோபாலவல்லி தாசரின் 1 நிமிட சத்சங்கம் கேளுங்கள். ...

Radhekrishna. ....
Krishna is supplying the required energy to your body parts from your food....
He is so much caring about your body....
Sameway He is caring for your life too...

1 minute sathsangam in tamil by GURUJI GOPALAVALLIDASAR. ..
Click this link to listen

Friday, November 28, 2014

உயர்வாக வாழ்வாய்…


ராதேக்ருஷ்ணா ….

பறவைகளைப் பார்த்து மிருகங்கள் பொறாமைப்படுவதில்லை....
மீன்களைப் பார்த்து மரங்கள் பொறாமைப்படவில்லை...
க்ருஷ்ணன் கொடுத்த வாழ்க்கையை அந்தந்த ஜீவன்கள் முழுமையாக வாழ்கின்றன...நீயும் உனக்குக் கிடைத்திருக்கும் வாழ்க்கையை பூரணமாக வாழ்வாய்.... க்ருஷ்ணா என்று ஜபித்துக்கொண்டே உயர்வாக வாழ்வாய்…

சத்தியமாய் காப்பான்..


ராதேக்ருஷ்ணா ….

தன்னை நம்பாத நாஸ்தீகருக்கும் அருளும் கண்ணன், அவனையே நம்பும் உன்னை கைவிட்டுவிடுவானா என்ன??? சத்தியமாய் காப்பான்...காத்திரு…

தெய்வாம்சம் நிறைந்த ஜீவன்....



ராதேக்ருஷ்ணா .

உன்னுள்ளே க்ருஷ்ணன் பூரணமாய் இருக்கிறான்....
அதனால் நீ தெய்வாம்சம் நிறைந்த ஒரு ஜீவன்....
உன்னை நீயே தாழ்த்திக்கொள்ளாதே.

நல்லதைப் பரப்பு...


ராதேக்ருஷ்ணா 

உனக்கு வேண்டப்பட்ட யாருக்காவது கஷ்டம் வியாதி பிரச்சினை என்றால் உடனே அதை பலரிடம் சொல்லி புலம்பாதே...அதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை...அவர்களுக்காக சிறிது நேரம் நாமஜபம் செய்து, க்ருஷ்ணனிடம் பிரார்த்தனை செய்....உலகில் நல்லதைப் பரப்பு…

வேறு என்ன வேண்டும்…

ராதேக்ருஷ்ணா ….

மனம் கல்லாக ஆனால் அதன் மேல் விட்டலனை நிற்க வை..
அவன் உன் மனதில் நின்றுவிட்டால் போதுமே... வேறு என்ன வேண்டும்…



நன்றி சொல்...



ராதேக்ருஷ்ணா 

இழந்ததை நினைத்து நிம்மதியை இழக்காதே ...
உன்னிடம் உள்ளவைகளுக்கு
க்ருஷ்ணனுக்கு நன்றி சொல்...
உன்னோடு க்ருஷ்ணன் இருப்பதற்காக ஆனந்தப்படு

குஷியாக இரு….


ராதேக்ருஷ்ணா 

நீ உன் க்ருஷ்ணனுக்கு என்றுமே குழந்தைதான்...
உலகம் உன்னை பலவிதமாய் பார்க்கிறது...
ஆனால் க்ருஷ்ணன் உன்னைத் தன் குழந்தையாக மட்டுமே பார்க்கிறான்...
ஆகவே குஷியாக இரு….

க்ருஷ்ண பிரசாதம்...


ராதேக்ருஷ்ணா 

உன் உடல் க்ருஷ்ண பிரசாதம். பொறுப்பாய் பார்த்துக்கொள்...
உன் மனம் க்ருஷ்ணனின் சொத்து...ஜாக்கிரதையாய் வைத்துக்கொள்...
உன் வாழ்க்கை க்ருஷ்ணன் தந்த வரம்... அருமையாய் உபயோகித்துக்கொள்…

Wednesday, November 19, 2014

ஆனந்தமாயிரு…


ராதேக்ருஷ்ணா 

நீ அழும்போது உன் க்ருஷ்ணனும் உன்னோடு அழுகிறான்...
அதனால் தயவு செய்து, எதற்கெடுத்தாலும் அழாதே...
நீ சிரிக்கும்போது உன் க்ருஷ்ணனும் உன்னோடு சிரிக்கிறான்...
அதனால் எப்போதும் சிரித்துக்கொண்டே ஆனந்தமாயிரு…

அது போதும்


ராதேக்ருஷ்ணா 

உன்னை யாருக்கும் தெரியவேண்டாம்...
உன்னை யாருக்கும் புரியவேண்டாம்...
உன்னை க்ருஷ்ணனுக்குத் தெரியும்....
உன்னை க்ருஷ்ணன் புரிந்துகொண்டிருக்கிறான்...
அது போதும் இங்கே நீ வாழ... அது மட்டுமே போதும் நீ வாழும் வரை….

என்றும் பெரியவன்….


ராதேக்ருஷ்ணா 

எதையும் பெரியதாய் எடுத்துக்கொள்ளாதே...
இன்று பெரியதான விஷயம், நாளை இதே உலகில் அதற்கு மரியாதையே கிடையாது.
க்ருஷ்ணன் மட்டும்தான் உலகில் என்றும் பெரியவன்….

ஆசைப்படு...


ராதேக்ருஷ்ணா 

ஆசைப்படு...
க்ருஷ்ணனைப் பார்க்க ஆசைப்படு...
க்ருஷ்ணனோடு பேச ஆசைப்படு...
க்ருஷ்ணனிடம் சண்டைபோட ஆசைப்படு...
க்ருஷ்ணனுக்கு முத்தம் தர ஆசைப்படு...
க்ருஷ்ணனை கட்டிப்பிடிக்க ஆசைப்படு...
க்ருஷ்ணன் உன் வீட்டில் உன்னோடு வாழ ஆசைப்படு...
க்ருஷ்ணனோடு தூங்க ஆசைப்படு...
க்ருஷ்ணனை பலவிதமாய் அனுபவிக்க ஆசைப்படு...
க்ருஷ்ணன் மடியில் உயிரை விட ஆசைப்படு…

பலகோடி வழியுண்டு…


ராதேக்ருஷ்ணா 

புலம்புவதை நிறுத்து.
சுயபச்சாதாபத்தை விடு...
இவையிரண்டும் செய்தாலே, உடலும் மனமும் தானாய் பலம் பெறும்...
க்ருஷ்ணனிடம் சரணாகதி செய்...
விடாமுயற்சி செய்...
இந்த இரண்டையும் செய்தால், நிச்சயம் உலகம் வசப்படும்....
நிம்மதியாக வாழ இங்கே பலகோடி வழியுண்டு…

உண்மையாய் இரு...


ராதேக்ருஷ்ணா 

உன் மனதில் தோன்றுவதை எல்லாம் அப்படியே எல்லோரிடமும் பேசிவிடாதே. க்ருஷ்ணனிடம் மட்டுமே உன்னால் எல்லாவற்றையும் மனதில் உள்ளபடி பேசமுடியும்...
மனிதரிடம் நிதானமாய் இரு..
க்ருஷ்ணனிடம் உண்மையாய் இரு…