Guru Vedham

Guru Vedham

Thursday, December 10, 2015

கோபாலனை அடைவாய்…


ராதேக்ருஷ்ணா...

கோமாதாவை நீ காக்கவில்லை...
கோமாதாவே உன்னை காக்கிறாள்...
நீ கோமாதாவுக்கு சேவை செய்...
நீ கோபாலனை அடைவாய்….

Wednesday, December 9, 2015

கவலை எதற்கு !?!?


ராதேக்ருஷ்ணா

உன்னோடு கண்ணன் இருக்க நீ இங்கே எதை இழந்தாலும் கவலையில்லை...
யார் உன்னை ஒதுக்கினாலும் கவலையில்லை...
எல்லாவற்றையும் தாண்டி உன்னோடு என்றும் இருப்பவன் கண்ணனே...
கண்ணே....கண்ணனிருக்க கவலை எதற்கு !?!?

Tuesday, December 8, 2015

பிரார்த்தனை செய்....


ராதேக்ருஷ்ணா


கண்ணனிடம் ப்ரார்த்தனை செய்தால், எதுவும் மாறும்...
எதுவாக இருந்தாலும், பிரார்த்தனை செய்....
பிரார்த்தனை என்பது நீ அவனிடம் ஆத்மார்த்தமாய் பேசுவது தானே....
உன் கண்ணனோடு, உன்னுள்ளே இருக்கும் கண்ணனோடு உரிமையோடு பேசு….

Saturday, November 28, 2015

நாமஜபம்


ராதேக்ருஷ்ணா

நாமஜபம் எல்லா பாபங்களையும் அழிக்கக்கூடியது....
நாமஜபம் பாபத்திற்கு காரணமான ஆசையையும், பூர்வ ஜன்ம கர்ம வினையையும், அஞ்ஞானத்தையும் அழிக்கக்கூடியது...
அதனால் விடாமல் பகவானுடைய பெயரை உச்சரித்துக் கொண்டே இரு….

அழைத்துக்கொள்வான்….


ராதேக்ருஷ்ணா

திருப்பாணாழ்வார் காவிரியின் கரையிலிருந்து "ரங்கா ரங்கா" என்று விடாமல் ஜபித்தார்...
ஸ்ரீரங்கநாதனை கோயிலில் சென்று தரிசித்தது கிடையாது...
ஆனால் "ரங்கா" என்னும் நாமமே, அவருக்கு ரங்கன் அருகில் சென்று அவனோடு கலக்கும் பாக்கியத்தைத் தந்தது...
நீயும் ஜபி… உன்னையும் ரங்கன் தன் அருகில் அழைத்துக்கொள்வான்….

அருட்பெருஞ்சோதி


ராதேக்ருஷ்ணா

இன்று நீ ஏற்றிய விளக்கில் உன் அஞ்ஞானமெல்லாம் அழிந்தது....
இன்று உன் வீட்டில் சத்குருமார்களின் வெளிச்சம் பரவியது...
இன்று உங்கள் வீட்டு விளக்கு ஜோதியில் கண்ணன் பூரணமாக நிறைந்திருக்கிறான்...
இனி உன் வாழ்வில் இருட்டில்லை...
இனி பூரண வெளிச்சம் மட்டுமே உனக்கும், உன் குடும்பத்திற்கும், உன் வம்சத்திற்கும்....
ராதையும்,கண்ணனும், 33கோடி தேவர்களும்,
எல்லா ஆசார்யபுருஷர்களும், எல்லா மஹாத்மாக்களும்,
உன் வீட்டில் இன்று அருட்பெருஞ்சோதியாக, தனிப் பெருங்கருணையோடு வந்துவிட்டார்கள்….

அழகாய் யோசி...


ராதேக்ருஷ்ணா

அழகாய் யோசி...
அழகான க்ருஷ்ணனை யோசி....
அர்த்தமுடன் யோசி...
பக்தர்களின் பக்தியை அர்த்தமறிந்து யோசி...
யோசிப்பது தவறல்ல...
எதை எப்படி யோசிக்கிறாய் என்பதே முக்கியம்…

Friday, November 27, 2015

ஹே துளசி மாதா...

ராதேக்ருஷ்ணா…

ஹே துளசி தேவி...
உன்னைப் போல் நானும் க்ருஷ்ணனின் திருவடியில் எப்போதும் வாழ அருள் செய்....

ஹே துளசி மாதா...
நீ எப்படி க்ருஷ்ணனின் இஷ்டப்படி இருக்கிறாயோ, அது போலே நானும் இருக்க ஆசீர்வாதம் செய்...

ஹே துளசி தேவி...
என்னை உன் அடிமையாக்கிக் கொள்…

உன் க்ருஷ்ணனோடு...

ராதேக்ருஷ்ணா…

காமத்திற்காக பல நாள் தூங்காமலிருந்தாய்...
துக்கத்தில் பல நாள் தூக்கம் தொலைத்திருந்தாய்...
கோபத்தில் எத்தனையோ நாட்கள் தூக்கத்தைக் கொன்றாய்...
குழப்பத்தில், பயத்தில் எத்தனை நாள் தூங்காமலிருந்தாய்...

இன்று கைசிக ஏகாதசி...
நம்பாடுவான் முழிந்திருந்து திருக்குறுங்குடி சுந்தர பரிபூரண நம்பியின் அனுக்ரஹம் பெற்றார்...
நம்பியோடு கொஞ்சம் ஆனந்தமாய் பேசிக்கொண்டிரேன்...

இன்று குருவாயூர் ஏகாதசி...
குருவாயூர் யானை கேசவன் முக்தி அடைந்த நாள்... தூங்காமல் குருவாயூரப்பனோடு கொஞ்சி விளையாடேன்...

இன்று கொஞ்ச நேரம் தூங்காமல் இருந்தால் நல்லது நடக்குமே...
நன்மை உண்டாகுமே...
உன்னால் முடியும்...
உன் க்ருஷ்ணனோடு இன்று இரவுப்பொழுதைக் கழி…

Saturday, November 21, 2015

கண்ணனுக்குத் தெரியும்...


ராதேக்ருஷ்ணா

க்ருஷ்ணனால் சரி செய்யமுடியாத பிரச்சனை என்று எதுவுமில்லை...
க்ருஷ்ணனால் தீர்க்க முடியாத வியாதியில்லை...
க்ருஷ்ணனால் மாற்ற முடியாத விதியில்லை...
உன் ஜாதகம் தோஷமாகவோ, மோசமாகவோ இருந்தாலும் கவலையில்லை...
உன் வாழ்வை சரி செய்யும் சூக்ஷ்மம் கண்ணனுக்குத் தெரியும்...
நாடி ஜோசியப்படி, உனக்கு பூர்வ ஜன்ம சாபமிருந்தாலும் பயப்படாதே....
உன்னுடைய எல்லா ஜன்மங்களின் பாவத்தையும், சாபத்தையும் சரி செய்யும் சக்தி கண்ணனிடம் உண்டு…

கம்ச வத தசமி....

ராதேக்ருஷ்ணா…

இன்று மிக உன்னதமான நாள்...
கம்ச வத தசமி....
கண்ணன் குவலயாபீட யானையை வதம் செய்த நாள் இன்று...
கண்ணனும் பலராமனும் சாணூரன், முஷ்டிகன் போன்ற மல்லர்களை வதம் செய்த நாள் இன்று...
கண்ணன் கம்சனை வதம் செய்து மதுராவிற்கு சுதந்திரம் தந்த நாள் இன்று...
கண்ணனும் பலராமனும், தங்கள் பெற்றோர் வசுதேவர் தேவகியை சிறையிலிருந்து விடுவித்த நாள் இன்று...
நம் கண்ணன் ஜெயித்த நாள் இன்று...
ஆனந்தமாய் கொண்டாடுவோம்…

பயப்படாமல் வாழ்...


ராதேக்ருஷ்ணா

மழையோ, வெய்யிலோ, குளிரோ 24 மணி நேரமும், எல்லா காலங்களிலும், கண்ணன் உன்னையும் என்னையும் காப்பாற்றவே இருக்கிறான்...
அதனால் எந்த காலத்திலும், எந்த இடத்திலும், எந்த விஷயத்திலும், பயப்படாமல், உன் வாழ்க்கையை வாழ்….

கோவிந்த பட்டாபிஷேகம்...


ராதேக்ருஷ்ணா

இன்று கோவிந்த பட்டாபிஷேகம்...
கண்ணனுக்கு 56 விதமான பதார்த்தங்களை கோபிகைகள் ஆசையாய் நிவேதனம் செய்த நாள்...
கண்ணன் ஒரு நாளைக்கு 8 தடவை சாப்பிடுவான்...
7 நாளாக கோவர்த்தன மலையை தூக்கிக்கொண்டிருந்ததால், ஒன்றும் சாப்பிடவில்லை...
7 வயது குழந்தையல்லவா...
அதனால் 7 நாள் ஆகாரத்தை, ஒன்றாய் சேர்த்து (7 x 8) 56 விதமாய் தந்தார்கள்....
நீயும் தா....
எங்கள் வீட்டு கண்ணனுக்கு 56 விதமான ருசிகரமான ஆகார வஸ்துக்கள் தயாராகிறது...
வாருங்கள்...
எல்லோரும் கோவிந்தனைக் கொண்டாடுவோம்…

கோபாஷ்டமி....

ராதேக்ருஷ்ணா…

இன்று கோபாஷ்டமி....
கன்றுகளை மேய்த்த கண்ணன் கோமாதாவை (பசு மாடுகளை) மேய்க்க ஆரம்பித்த நாள் இன்று...
கண்ணன் கோமாதா பூஜை செய்த நாள் இன்று....
7 நாள் கோவர்த்தன மலையை தூக்கின கண்ணன் அதை கீழே வைத்த நாள் இன்று....
இந்திரன் கண்ணனிடத்தில் மன்னிப்பு கேட்ட நாள் இன்று...
இந்திரன் கண்ணனுக்கு கோவிந்த பட்டாபிஷேகம் செய்து வைத்த நாள் இன்று...
கண்ணனுக்கு 56 விதமான பதார்த்தங்களோடு கோபிகைகள் அன்னம் பரிமாறின நாள் இன்று...
நாமும் கொண்டாடுவோம்....
கோபாலா....கோவிந்தா….

சிறு துளி பெரு வெள்ளம்


ராதேக்ருஷ்ணா

சிறு துளி பெரு வெள்ளம்...
ஒவ்வொரு துளியாய் சேரும் போது அதன் பலம் பெரு வெள்ளமாய் மாறும்...
அது போல் நீ ஒவ்வொரு தடவை சொல்லும் நாமமும்,
பெரிய பலத்தோடு உன் வாழ்வின் ஒவ்வொரு விஷயத்தையும் மாற்றும் சக்தி உடையது...
விடாத நாமஜபம் உன்னையும், உன் வாழ்க்கையையும், உன் எண்ணங்களையும், சத்தியமாய் மாற்றும்...
நீ சொல்லும் நாமத்தின் பலம், உலகை விட சக்தி வாய்ந்தது…

நாமஜபம் செய்....


ராதேக்ருஷ்ணா

நீ எப்படி வாழ்வில் வழி தவறிப் போக முடியும்???
அதற்கு வாய்ப்பே இல்லை...
க்ருஷ்ணன்தான் உன்னையே நினைத்துக்கொண்டிருக்கிறானே...
நீ பக்தியை விட்டும் விலக முடியாது...
க்ருஷ்ணன் தான் உன்னை பிடித்துக்கொண்டிருக்கிறானே...
நீ நாமஜபம் செய்....
அது போதும்…

ஜெய் ஹிந்த்…



ராதேக்ருஷ்ணா

இன்று எனக்கு வாட்ஸப்பில் வந்த பஞ்சாங்க மழை கணிப்பு...
நம் முன்னோர்கள் அதிமேதாவிகளே...

இந்து என்று சொல்லுவோம்...
தலை நிமிர்ந்து வாழ்வோம்...

ஜெய் ஹிந்த்…

Monday, November 16, 2015

வாழ உலகினில் பெய்திடாய்…


ராதேக்ருஷ்ணா

பிரார்த்தனை பலமானது...
பிரார்த்தனைக்கு இயற்கையும் செவி சாய்க்கும்...
எல்லோரும் உலகினில் வாழும்படியான மழை மட்டும் பெய்யட்டும்...
ஹே க்ருஷ்ணா...
அதிகப்படியான மழை ஒரு போதும் வேண்டாம்...
வாழ உலகினில் பெய்திடாய்….

நம்பு...


ராதேக்ருஷ்ணா

உன்னால் முடியும் நம்பு...
க்ருஷ்ணன் உண்டு நம்பு...
நீ வாழ்வில் வெல்வாய் நம்பு...
நீ க்ருஷ்ணனை அனுபவிக்கிறாய் நம்பு...
க்ருஷ்ணன் உன்னை நேசிக்கிறான் நம்பு…

கண்ணனுக்குத் தெரியும்...


ராதேக்ருஷ்ணா

யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் உன்னைப் பற்றி நினைத்துக்கொள்ளட்டும்...
உன்னைப் பற்றி உன் கண்ணனுக்குத் தெரியும்...
நீ உன் கண்ணனின் கையைப் பிடித்துக்கொண்டு உன் வாழ்வில் முன்னேறிச் செல்...
உன் முன்னேற்றத்தைத் தடுக்க யாராலும் முடியாது….

Thursday, November 12, 2015

கண்ணனோடு தான்....


ராதேக்ருஷ்ணா

இன்று கோவர்த்தன பூஜை செய்ததால் ஒரே மழை...
இந்திரன் அகம்பாவத்தினால் மழை கொட்டுகிறான்..
கண்ணன் இப்போது கோவர்த்தன மலையைத் தூக்கிக் கொண்டு நிற்கிறான்...
நீயும் அதன் கீழே போய் ஜாக்கிரதையாய் நின்றுகொள்...
இல்லையென்றால் நிம்மதியாய் படுத்துக்கொள்...
இன்னும் 7 நாள் கோவர்த்தன மலைக்கீழ் கண்ணனோடு தான்....
ஆனந்தமாய் அனுபவி…

கோவர்தன பூஜை...


ராதேக்ருஷ்ணா

நாளைக்கு கோவர்தன பூஜை...
கண்ணனே கோவர்தன கிரி ராஜனை கொண்டாடின நாள்...
கண்ணனே கோவர்தன கிரி ராஜனை சேவித்த நாள்...
கண்ணனே கோவர்தன கிரி ராஜனை கையில் தூக்கிய நாள்...
நாமும் கொண்டாடுவோம்...
விதவிதமாய் பக்ஷணங்கள் செய்வோம்...
கோவர்தன கிரி ராஜனுக்கு பூஜை செய்வோம்...
கண்ணனின் பூரண அனுக்ரஹத்தை பெறுவோம்...
இன்னும் தீபாவளி முடியவில்லை...
நாம் நாமத்தை விடாமல் ஜபித்து நாம தீபாவளி கொண்டாடுவோம்…

Tuesday, November 10, 2015

அணையா விளக்கு


ராதேக்ருஷ்ணா

உன்னுள்ளே என்றும் ஒரு அணையா விளக்கு அழகாய் பிரகாசிக்கின்றது...
க்ருஷ்ணன் என்னும் அந்த விளக்கு உனக்கு என்றும் வெளிச்சம் மட்டுமே தருகிறது...
அந்த வெளிச்சத்தில், நீயும், உன் குடும்பமும், உன் வம்சமும் கரையேறி விடுவீர்கள்...
உன் தீபாவளிக்கு என்றுமே முடிவில்லை…

Monday, November 9, 2015

குருவின் ஆசீர்வாதங்கள்…

ராதேக்ருஷ்ணா…

உனது உள்ளத்தின் பக்தி தீப ஒளியில் கண்ணன் பிரகாசிக்கட்டும்....
உனது மனதின் ஞான தீப ஒளியில் நிம்மதி ஒளிரட்டும்....
உனது நாவின் நாம தீப ஒளியில் வாழ்க்கை பிரகாசிக்கட்டும்....
உனது நம்பிக்கை தீப ஒளியில் சரணாகதி சித்திக்கட்டும்...
உனது சிரத்தையின் தீப ஒளியில் குருவின் ஆசீர்வாதம் மிளிரட்டும்...

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் ஒளிமயமான குறைவில்லாத க்ருஷ்ணானுபவ வாழ்க்கைக்கு பூரணமான ஆசீர்வாதங்கள்…

கிச்சாவோட கொண்டாடனும்

ராதேக்ருஷ்ணா…

தீபாவளிக்கு புதுத்துணி வாங்கியாச்சா ?!?
பக்ஷணம் எல்லாம் பண்ணியாச்சா ?!?
பட்டாசு எல்லாம் வாங்கியாச்சா ?!?

கிச்சா பயல் உன்னோடும், உன் குடும்பத்தோடும் தீபாவளி கொண்டாட ஆசையோடு காத்திருக்கிறான்...
அது சரி...
உங்க வீட்டு கிச்சா பயலுக்கு புதுத்துணி வாங்கியாச்சா ?!?!
அவன் கூட இருக்கிற அவனுக்கு பிடித்த மற்ற தேவர்களுக்கு எல்லாம் புதுத்துணி வாங்கியாச்சா ?!?
கிச்சாவோட புதுத்துணி எல்லாம் உடுத்திண்டு, பக்ஷணம் சாப்பிட்டு, பட்டாசு வெடிச்சாதானே தீபாவளி ஜோரா இருக்கும் !!!
அதனால் இந்த தீபாவளியை கிச்சாவோட கொண்டாடனும் சரியா….

குருவாயூரப்பனோடு...

ராதேக்ருஷ்ணா…

குரூரம்மை போல் பக்தியை குருவாயூரப்பன் இந்த தீபாவளிக்கு உனக்கு விசேஷமாய் தருகிறான்...

பூந்தானம் போல் பணிவை குருவாயூரப்பன் இந்த தீபாவளிக்கு உனக்கு அன்பாய் தருகிறான்...
மஞ்சுளா போல் நம்பிக்கையை குருவாயூரப்பன் இந்த தீபாவளிக்கு உனக்கு அள்ளித் தருகிறான்...
நாராயண பட்டத்திரி போல் சிரத்தையை குருவாயூரப்பன் இந்த தீபாவளிக்கு உனக்கு ஆசையாய் தருகிறான்...
வாங்கிக்கொள் பூரணமாக...
இந்த தீபாவளி குட்டன் உன்னிகிருஷ்ணன் குருவாயூரப்பனோடு…

குருவாயூருக்கு வாருங்கள்...

ராதேக்ருஷ்ணா…

குருவாயூருக்கு வாருங்கள்...
ஒரு சமத்துக் குழந்தை சிரிப்பதை பாருங்கள்...

குருவாயூருக்கு வாருங்கள்...
ஒரு செல்லக் குட்டன் பேசுவதைக் கேளுங்கள்...

குருவாயூருக்கு வாருங்கள்...
ஒரு உன்னி க்ருஷ்ணன் சாப்பிடுவதை காணுங்கள்...

குருவாயூருக்கு வாருங்கள்...
ஒரு தெய்வம் அருளுவதை வாங்கிக்கொள்ளுங்கள்...

குருவாயூருக்கு வாருங்கள்...
ஒரு கள்ளனிடம் உங்களை தந்துவிடுங்கள்…

க்ருஷ்ணனே சத்தியம்...

ராதேக்ருஷ்ணா…

இந்த நிலை மாறும்...
இதுவும் கடந்து போகும்...

துக்கத்தில் இருக்கும் போது சொல்லிக்கொள்..
இந்த நிலை மாறும்...
இதுவும் கடந்து போகும்...

தோல்வியில் துவளும் போது சொல்லிக்கொள்...
இந்த நிலை மாறும்...
இதுவும் கடந்து போகும்...

வியாதியில் கஷ்டப்படும் போது சொல்லிக்கொள்...
இந்த நிலை மாறும்...
இதுவும் கடந்து போகும்...

உன்னை அடுத்தவர் அவமதிக்கும்போது சொல்லிக்கொள்...
இந்த நிலை மாறும்...
இதுவும் கடந்து போகும்...

எல்லோரும் உன்னை கொண்டாடும் போது சொல்லிக்கொள்...
இந்த நிலை மாறும்...
இதுவும் கடந்து போகும்...

க்ருஷ்ணனே சத்தியம்...
மற்ற எதுவும் நிலையில்லை இங்கே...
எல்லாம் கடந்து போகும்…

Thursday, November 5, 2015

வாதிடாதே....


ராதேக்ருஷ்ணா

நீ எந்த ஒரு சமயத்திலும், பக்தி விஷயத்தில், உன் வழி அல்லது முறை அல்லது சம்பிரதாயம் தான் சிறந்தது என்று யாரிடமும் வாதிடாதே....
வாத விவாதங்கள் பல சந்தர்ப்பங்களில், மனதில் வெறுப்பையும், கோபத்தையும், குழப்பத்தையும் உண்டாக்குகிறது....
அதை விட க்ருஷ்ணனை அனுபவிப்பது மிக முக்கியம்...
அவரவருக்கு தன்னைப் பற்றிய அறிவை கண்ணனே தகுந்த காலத்தில் கட்டாயம் தருவான்... நீயும் அப்படித்தானே பக்தி செய்ய ஆரம்பித்தாய்...
அவனருளே உனக்கும், எனக்கும், யாவருக்கும் பக்தியைத் தருகிறது…


நிம்மதியாய் எழுந்திரு…


ராதேக்ருஷ்ணா

சூரியனாய் கண்ணனே உன் பகல் பொழுதை தொடங்குகிறான்...
இரவாய் கண்ணனே உன்னை தன் மடியில் தூங்க வைக்கிறான்...
காற்றாய் கண்ணனே உன் சுவாசக் காற்றாய் இருக்கிறான்...
அதனால் சமத்துக் குழந்தையே...
நிம்மதியாய் உறங்கு...
நிம்மதியாய் எழுந்திரு…

க்ருஷ்ணனிடம் கேள்...


ராதேக்ருஷ்ணா


ஒவ்வொருவரும் ஒவ்வொரு இயல்பு...
நீ அதை புரிந்துகொள்...
நீ அடுத்தவரை மாற்ற முயற்சிப்பதை விட, நீ எப்படி அவர்களிடம் நடந்துகொண்டால் நன்மை என்பதை தெரிந்து கொள்...க்ருஷ்ணனிடம் கேள்...
அவன் அழகாய் உலகில் எல்லோரிடமும் பிரச்சனையில்லாமல் வாழும் ரகசியங்களைச் சொல்லித்தருவான்…

நன்றாக இருக்கும்…


ராதேக்ருஷ்ணா

சர்வ லோகத்துக்கும் ஈஸ்வரனான பகவான் க்ருஷ்ணன் உனக்காக இருக்கிறான்...
சர்வ லோகத்தையும் தன் வயிற்றில் பிரளயத்தில் வைத்திருக்கும் கண்ணன் உன்னுள்ளே வாழ்கிறான்...
அதனால் உன் வாழ்க்கை நன்றாகத்தான் இருக்கும்…

Wednesday, November 4, 2015

அனந்தபத்மநாபன் கடமை…


ராதேக்ருஷ்ணா

உலகையும், உன்னையும், என்னையும், படைக்கும் பிரம்மனையும் தன் நாபியில் வைத்திருப்பவன் அனந்தபத்மநாபன்...
ஸ்ரீ பத்மநாபனின் க்ருபை நமக்கு இங்கே போதும்...
துக்கத்தையும், பயத்தையும், சந்தேகத்தையும்,
குழப்பத்தையும், ஸ்ரீ அனந்தபத்மநாபன் திருவடியில் போடு...
இனி உன்னை வழிநடத்துவது அனந்தபத்மநாபன் கடமை…

சரணடைந்து விடு....


ராதேக்ருஷ்ணா

ஒரு முறை என்னை சரணடைந்து நான் உன்னைச் சேர்ந்தவன் என்று என்னிடம் தன்னை ஒப்படைத்தவரை எல்லா சமயங்களிலும், எல்லா இடங்களிலும், எல்லோரிடமிருந்தும் காப்பது என் கடமை என்று பகவான் ராமன் சத்தியம் செய்திருக்கிறான்....
உடனே சரணடைந்து விடு....
எல்லா கவலைகளையும் விட்டுவிடு…