Guru Vedham
Saturday, November 28, 2015
அழைத்துக்கொள்வான்….
ராதேக்ருஷ்ணா…
திருப்பாணாழ்வார் காவிரியின் கரையிலிருந்து "ரங்கா ரங்கா" என்று விடாமல் ஜபித்தார்...
ஸ்ரீரங்கநாதனை கோயிலில் சென்று தரிசித்தது கிடையாது...
ஆனால் "ரங்கா" என்னும் நாமமே, அவருக்கு ரங்கன் அருகில் சென்று அவனோடு கலக்கும் பாக்கியத்தைத் தந்தது...
நீயும் ஜபி… உன்னையும் ரங்கன் தன் அருகில் அழைத்துக்கொள்வான்….
அருட்பெருஞ்சோதி
ராதேக்ருஷ்ணா…
இன்று நீ ஏற்றிய விளக்கில் உன் அஞ்ஞானமெல்லாம் அழிந்தது....
இன்று உன் வீட்டில் சத்குருமார்களின் வெளிச்சம் பரவியது...
இன்று உங்கள் வீட்டு விளக்கு ஜோதியில் கண்ணன் பூரணமாக நிறைந்திருக்கிறான்...
இனி உன் வாழ்வில் இருட்டில்லை...
இனி பூரண வெளிச்சம் மட்டுமே உனக்கும், உன் குடும்பத்திற்கும், உன் வம்சத்திற்கும்....
ராதையும்,கண்ணனும், 33கோடி தேவர்களும்,
எல்லா ஆசார்யபுருஷர்களும், எல்லா மஹாத்மாக்களும்,
உன் வீட்டில் இன்று அருட்பெருஞ்சோதியாக, தனிப் பெருங்கருணையோடு வந்துவிட்டார்கள்….
Friday, November 27, 2015
உன் க்ருஷ்ணனோடு...
ராதேக்ருஷ்ணா…
காமத்திற்காக பல நாள் தூங்காமலிருந்தாய்...
துக்கத்தில் பல நாள் தூக்கம் தொலைத்திருந்தாய்...
கோபத்தில் எத்தனையோ நாட்கள் தூக்கத்தைக் கொன்றாய்...
குழப்பத்தில், பயத்தில் எத்தனை நாள் தூங்காமலிருந்தாய்...
இன்று கைசிக ஏகாதசி...
நம்பாடுவான் முழிந்திருந்து திருக்குறுங்குடி சுந்தர பரிபூரண நம்பியின் அனுக்ரஹம் பெற்றார்...
நம்பியோடு கொஞ்சம் ஆனந்தமாய் பேசிக்கொண்டிரேன்...
இன்று குருவாயூர் ஏகாதசி...
குருவாயூர் யானை கேசவன் முக்தி அடைந்த நாள்... தூங்காமல் குருவாயூரப்பனோடு கொஞ்சி விளையாடேன்...
இன்று கொஞ்ச நேரம் தூங்காமல் இருந்தால் நல்லது நடக்குமே...
நன்மை உண்டாகுமே...
உன்னால் முடியும்...
உன் க்ருஷ்ணனோடு இன்று இரவுப்பொழுதைக் கழி…
Saturday, November 21, 2015
கண்ணனுக்குத் தெரியும்...
ராதேக்ருஷ்ணா…
க்ருஷ்ணனால் சரி செய்யமுடியாத பிரச்சனை என்று எதுவுமில்லை...
க்ருஷ்ணனால் தீர்க்க முடியாத வியாதியில்லை...
க்ருஷ்ணனால் மாற்ற முடியாத விதியில்லை...
உன் ஜாதகம் தோஷமாகவோ, மோசமாகவோ இருந்தாலும் கவலையில்லை...
உன் வாழ்வை சரி செய்யும் சூக்ஷ்மம் கண்ணனுக்குத் தெரியும்...
நாடி ஜோசியப்படி, உனக்கு பூர்வ ஜன்ம சாபமிருந்தாலும் பயப்படாதே....
உன்னுடைய எல்லா ஜன்மங்களின் பாவத்தையும், சாபத்தையும் சரி செய்யும் சக்தி கண்ணனிடம் உண்டு…
Subscribe to:
Posts (Atom)






