Guru Vedham

Guru Vedham

Saturday, February 28, 2015

விடுவித்துக்கொள்…


ராதேக்ருஷ்ணா…

தற்பெருமையினால் உன்னை நீயே ஏமாற்றிக்கொள்ளாதே...
பொய்யினால் உன்னை நீயே தாழ்த்திக்கொள்ளாதே...
பயத்தினால் உன்னை நீயே பலவீனமாக்கிக் கொள்ளாதே..
க்ருஷ்ண நாமத்தினால் நீ உன்னை உயர்த்திக்கொள்...
க்ருஷ்ணனிடம் உன்னை ஒப்படைத்து, கவலைகள், பாபங்கள், இவற்றிலிருந்து உன்னை விடுவித்துக்கொள்…


பக்தி செய்ய...


ராதேக்ருஷ்ணா…

பக்தி செய்ய உன் வயது முக்கியமல்ல...
பக்தி செய்ய உன் குலம் முக்கியமல்ல...
பக்தி செய்ய உன் படிப்பு முக்கியமல்ல...
பக்தி செய்ய உன் சொத்து முக்கியமல்ல...
பக்தி செய்ய உன் இருப்பிடம் முக்கியமல்ல...
பக்தி செய்ய நம்பிக்கையே முக்கியம்...
பக்தி செய்ய குரு வழிகாட்டுதலே முக்கியம்...
பக்தி செய்ய உன் மனமே முக்கியம்...
பக்தி செய்ய க்ருஷ்ண க்ருபையே முக்கியம்...
நீ பக்தி செய்து ஆனந்தமாக க்ருஷ்ணனை அனுபவித்து. வாழ்வை வெல்லவே பிறந்திருக்கிறாய்…


விட்டுத்தள்ளு...


ராதேக்ருஷ்ணா…


விட்டுத்தள்ளு...
உன்னை ஒதுக்கி வைத்தால் வைக்கட்டுமே...அப்பாடா என்று நிம்மதியாக இரு... க்ருஷ்ணன் எப்படியும் உன்னை ஒதுக்கமாட்டான்... அவனால் உன்னை ஒதுக்கவும் முடியாது...
உன்னை தன்னிடமிருந்து ஒதுக்கிவைத்து மனிதர்கள் நீ க்ருஷ்ணனை அனுபவிக்கும் நேரத்தை அதிகப்படுத்தி கொடுத்திருக்கிறார்கள் என்று ஆனந்தக்கூத்தாடு... அதை விட்டு விட்டு புலம்புவாயா?!?


நாமஜபம் செய்…


ராதேக்ருஷ்ணா …

கொஞ்சம் பொறுமையாயிரு...
மனிதர்கள் எல்லோருக்கும் தன்னை உணரவும், சரி செய்துகொள்ளவும் சிறிது கால அவகாசம் தேவை...
உன்னை நீ மாற்றிக்கொள்ளவும் கொஞ்சம் கால அவகாசம் தேவை... அனாவசியமாக உன்னை நீயே நொந்துகொள்ளாதே...
சத்தியமாய் க்ருஷ்ணன் உன்னை மாற்றிக்காட்டுவான்...
நம்பிக்கையோடு நாமஜபம் செய்…


இப்போது வாழ்...


ராதேக்ருஷ்ணா …

உன்னுள்ளே க்ருஷ்ணன் என்னும் அழியாத சொத்து என்றும் மாறாமல் இருக்கிறது. அதனால் நீயும் ஒரு தெய்வப்பிறவியே...
நடந்ததை மற...
நடக்கப்போவதை விடு...
இப்போது வாழ்…


பிரியமாட்டான்...



ராதேக்ருஷ்ணா …

உன் உழைப்பு ஒரு நாளும் வீண் போகாது...
உன் பக்தி ஒரு நாளும் தோற்காது...
உன் நாம ஜபம் ஒரு நாளும் உன்னைக் கைவிடாது...
உன் நம்பிக்கை ஒரு நாளும் கெடாது...
உன் க்ருஷ்ணன் ஒரு நாளும் உன்னைப் பிரியமாட்டான்...
உன் வாழ்க்கை ஒரு நாளும் வீழாது…

க்ருஷ்ணன் தீர்மானிக்கட்டும்…


ராதேக்ருஷ்ணா …

அகம்பாவிகளிடம் அடங்கிப்போகாதே...
நம்பிக்கை துரோகிகளிடம்
பயப்படாதே...
வெளிவேஷம் போடுபவரிடம் விட்டுக்கொடுக்காதே...
உன் க்ருஷ்ணன் உனக்கு இவர்களை வெல்ல வழி சொல்லித்தருவான்...
தடைகளைத் தகர்த்தெறி...
உன் வழியை க்ருஷ்ணன் தீர்மானிக்கட்டும்…