Guru Vedham

Guru Vedham

Monday, January 26, 2015

விட்டுவிடாதே...


ராதேக்ருஷ்ணா …

நாம ஜபத்தைத் தவிர உனக்கு நல்ல தோழமை கிடையாது...
நாம ஜபத்தைப் போல் உன் மேல் அக்கறை கொண்டவர் யாருமில்லை...
நாம ஜபத்தைப் போல் உன்னைக் காப்பாற்ற யாருமே கிடையாது...
நாம ஜபமே உன் கவலைகளுக்கு ஒரே மருந்து...
நாம ஜபமே உன் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு...
அதனால் நாமஜபத்தை மட்டும் ஒரு நாளும் விட்டுவிடாதே...
ராதேக்ருஷ்ணா


சாம்ராஜ்ஜியம்...


ராதேக்ருஷ்ணா…

உன் வாழ்க்கை ஒரு சாம்ராஜ்ஜியம்...
அந்த ப்ரேம சாம்ராஜ்ஜியத்தின் பேரரசன் க்ருஷ்ணன்...
அந்த அற்புத சாம்ராஜ்ஜியத்தின் ராணி ராதிகா...
அந்த உத்தம சாம்ராஜ்ஜியத்தின் மஹாமந்திரி உன் குருநாதர்...
அப்பொழுது நீ யார் ???
அந்த அழகான சாம்ராஜ்ஜியத்தின் அத்ருஷ்டக்கார யுவராஜன் / யுவராணி நீ தான்....
அதனால் அன்புகுக்குழந்தையே...
ஆனந்தமாய் விளையாடிக்கொண்டு, உன் கடமைகளை ஆசையாய் செய்துகொண்டு, ஒரு கவலையில்லாமல் சந்தோஷமாய் இரு…


நிம்மதியாய் இரு


ராதேக்ருஷ்ணா …


ஒரு சிறு பறவை தன் விடாமுயற்சியால் அழகான ஒரு கூடு கட்டி நம்பிக்கையோடு ஆனந்தமாய் வாழும்போது, க்ருஷ்ணனை நம்பும் நீ நிம்மதியாய் இந்த உலகில் வாழமுடியாதோ ?!?



க்ருஷ்ணனின் பொறுப்பு...


ராதேக்ருஷ்ணா …

உன்னுடைய பிரச்சினைகள் உனக்கு தெரியும் முன்பே க்ருஷ்ணனுக்குத் தெரியும்...
அதனால் தீர்வை அவன் ஏற்கனவே தயாராகவே வைத்திருக்கிறான்...
நீ பிரச்சனையாகப் பார்ப்பதாலேயே அது பிரச்சனையாகத் தெரிகிறது...
நீ பிரச்சனைகளை நினைத்து நொந்துபோகாதே...
உன்னை ஜெயிக்கவைப்பது க்ருஷ்ணனின் பொறுப்பு…


உன்னால் முடியும்...


ராதேக்ருஷ்ணா …

உன்னால் முடியும்...
க்ருஷ்ண க்ருபையை உணர உன்னால் முடியும்...
எப்போதும் அமைதியாய் வாழ உன்னால் முடியும்..
எந்த சூழ்நிலையிலும் தெளிவாக யோசிக்க உன்னால் முடியும்...
எடுத்த காரியத்தை பதற்றப்படாமல் செய்து முடிக்க உன்னால் முடியும்...
ஞானத்தை உள்ளபடி அறிய உன்னால் முடியும்...
வைராக்கியத்தினால் வேண்டாததை ஒதுக்கித் தள்ள உன்னால் முடியும்...
உன்னை க்ருஷ்ணன் அழகாக, அருமையாக, நேர்த்தியாகத்தான் படைத்திருக்கிறான்…


ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே…


ராதேக்ருஷ்ணா …

நீ என்றுமே க்ருஷ்ணனுக்கு மிகப்பிரியமான ஜீவனே...
நீ எப்போதும் க்ருஷ்ணனின் விசேஷ சொத்து தான்....
நீ எல்லா சமயத்திலும் க்ருஷ்ணனின் செல்லக் குழந்தையே...
அதனால் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே…


உனக்கென்ன குறைச்சல் !!!


ராதேக்ருஷ்ணா …

உன்னை உன் க்ருஷ்ணன் தன் கைகளில் ஆசையோடு தாங்குகிறான்...
உன்னை உன் க்ருஷ்ணன் தங்கத் தாம்பாளம் என்னும் வாழ்க்கையில் வைத்து அன்போடு தாங்குகிறான்...
உன்னை உன் க்ருஷ்ணன் தன் இதயக்கோயிலில் பொக்கிஷமாய் வைத்துத் தாங்குகிறான்...
உனக்கென்ன குறைச்சல் !!!
நீ இளவரசி / நீ இளவரசன்…