உன் வாழ்வின் ஒவ்வொரு நிமிஷத்தையும் க்ருஷ்ணன் அழகாகவும் அற்புதமாகவும் செதுக்குகிறான். நீ முழுமையாக ஒத்துழைப்பு தந்தால் போதும். நீயே அசந்துபோகும்படி உன் வாழ்க்கை அமர்க்களமாக இருக்கும்...உன் வளர்ச்சிக்காக க்ருஷ்ணனோடு ஒத்துழை...
உன் மனதில் சரியென்று தோன்றாதவரை எந்த விஷயத்திலும் அவசரமாய் முடிவு எடுக்காதே. உன் உள்ளே க்ருஷ்ணன் இருந்து உனக்குத் தெளிவாக வழி காட்டுகிறான். அதுவே உள்ளுணர்வு. அது உன்னை ஒரு நாளும் தவறான பாதையில் அழைத்துச்செல்லாது...
அடுத்தவருக்கு தர வேண்டிய மரியாதையை நீ சரியாக தந்துவிடு. அவர்கள் அதை அலட்சியம் செய்தாலும் கவலைப்படாதே. கிடைக்கும் மரியாதையை இழப்பது அவர்களுக்குதான் நஷ்டம். க்ருஷ்ணார்ப்பணம் என்று சொல்லி எல்லோருக்கும் மரியாதையை செய். காலம் மற்றவருக்கு உன்னைப் புரியவைக்கும்.
உன் மனது என்றும் இளமையானது. அதனால் உன்னுடைய உற்சாகம் ஒரு நாளும் குறையாது. அதுவே உன் பலம். அதனால் எப்பொழுது வேண்டுமானாலும் புதியதாக சிந்தனை செய்து, புதிய லட்சியத்தை அடைய உன்னால் நிச்சயம் முடியும். க்ருஷ்ணன் கையைப் பிடித்துக்கொண்டு புதிய பாதையில் செல்....
அமைதியாய் உன் கடமைகளை ஆசையோடு செய். காலம் உனக்குறிய மரியாதையயும், உயர்வையும் நிச்சயமாகத் தரும். உன் உழைப்பும் முயற்சியும் கண்ணனுக்கு நன்றாகத் தெரியும். நீ க்ருஷ்ணனை நம்பி உன் கடமைகளை செய்...