Guru Vedham

Guru Vedham

Tuesday, July 29, 2014

செல்லக்குழந்தை...


ராதேக்ருஷ்ணா …

மனது பாரமானால் வாழ்க்கை சுமையாகும். நீ சுமைதாங்கி அல்ல. நீ க்ருஷ்ணனின் செல்லக்குழந்தை. மனதை லேசாக வைத்துக்கொள். அப்பொழுது க்ருஷ்ணனை உணரலாம். மனது லேசாக இருக்க க்ருஷ்ணனிடம் மனதைக் கொடுத்துவிடு..


கண்டுபிடி...


ராதேக்ருஷ்ணா …

எல்லோரும் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று நினைக்க உனக்கு அதிகாரமில்லை. நீ எப்படி இருக்கவேண்டும் என்பதை மட்டும் முடிவுசெய். க்ருஷ்ணன் உன்னிடம் என்ன எதிர்பார்க்கிறான் என்பதைக் கண்டுபிடி. அவனிஷ்டப்படி வாழவே நீ இங்கே பிறந்திருக்கிறாய்..



Sunday, July 27, 2014

நன்றி சொல்…


ராதேக்ருஷ்ணா ...
எல்லாம் நன்மைக்கே ...
இதை மனதில் ஆழமாக பதித்து வை. அப்பொழுதுதான் க்ருஷ்ணன் உனக்கு செய்யும் அருள் உள்ளபடி புரியும். உனக்கு நடந்த எல்லா நிகழ்வுகளையும் நினைத்துப்பார். நிச்சயம் உனக்குப் புரியும். க்ருஷ்ணனுக்கு நன்றி சொல்…

ராதேக்ருஷ்ணா …

திருப்தியாய் இரு…


ராதேக்ருஷ்ணா ...
நீ நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் உனக்கு அஹம்பாவம் அதிகமாகிவிடும். அதனால் நீதான் கஷ்டப்படுவாய். 
ஆகவே நீ நினைப்பது எல்லாம் நடக்காதிருப்பதே உனக்கு நல்லது.
க்ருஷ்ணன் உனக்கு எது நல்லதோ அதை மட்டும் தான் செய்கிறான். 
அதனால் திருப்தியாய் இரு…

ராதேக்ருஷ்ணா …

கடமையை செய்...


ராதேக்ருஷ்ணா ...
உன் கடமையை நீ ஒழுங்காக செய்...
உலகம் என்ன வேண்டுமானாலும் நினைக்கட்டும்,,சொல்லட்டும் ...
உன் க்ருஷ்ணனுக்கு உன்னை நன்றாகத் தெரியும். 
க்ருஷ்ணன் உலகிற்கு உன்னை நிரூபிப்பான்…

ராதேக்ருஷ்ணா …


அவன் செயல்..


ராதேக்ருஷ்ணா ...
சரணாகதி செய்வது உன் வேலை...
காப்பது க்ருஷ்ணனின் வேலை...
நாமஜபம் செய்வது உன் வேலை ...
வாழவைப்பது க்ருஷ்ணனின் வேலை...
பக்தி செய்வது உன் வேலை...
பக்குவப்படுத்துவது க்ருஷ்ணனின் வேலை...
கடமையைச் செய்வது உன் வேலை...
பலனளிப்பது க்ருஷ்ணனின் வேலை...
உன் வேலையை நீ செய்!
மற்றவை அவன் செயல்..

ராதேக்ருஷ்ணா …

க்ருஷ்ணன் வேண்டுமா??

ராதேக்ருஷ்ணா ...
க்ருஷ்ணனுக்கு உன் நேரத்தைத் தா...
க்ருஷ்ணனுக்கு உன் உடலைத் தா...
க்ருஷ்ணனுக்கு உன் மனதைத் தா...
க்ருஷ்ணனிடம் உன்னைத் தா...
இதையெல்லாம் தந்தால் உனக்கு என்ன கிடைக்கும்?
காதைத் தா...
ரஹஸ்யமாய் சொல்கிறேன் ...
க்ருஷ்ணன் உனக்குத் தன்னையே கொடுப்பான்...
க்ருஷ்ணன் வேண்டுமா?!?
 ராதேக்ருஷ்ணா …