Guru Vedham

Guru Vedham

Monday, October 10, 2016

உன் எண்ணங்கள்...

க்ருஷ்ணனின் தபால்📬
உன் மனதின் எண்ணங்கள் எல்லாம் மிகப் பலமானவை !
உன் ஒவ்வொரு எண்ணமுமே உன் வாழ்வில் ஒரு தாக்கத்தை ஒவ்வொரு கால கட்டத்தில் உண்டாக்குகிறது !
உன் எண்ணங்களை கவனி !
உன் எண்ணங்களை புரிந்து கொள் !
உன் எண்ணங்களை மாற்றிக்கொள் !

இன்று முதல் க்ருஷ்ணனின் பலத்தோடும் அருளோடும் உன் எண்ணங்கள் நல் வழியில் செல்லும் !
*குருஜீ கோபாலவல்லிதாசர்*

Sunday, October 9, 2016

பொதுவானது !

க்ருஷ்ணனின் தபால் 📬
இந்த உலகம் எல்லோருக்கும் பொதுவானது !
இந்த உலகில் யாருக்கும் கஷ்டம் கொடுக்காமல் வாழ எல்லோருக்கும் உரிமை உண்டு !
நீ வாழ்வது தண்டம் என்று சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை !
அடுத்தவரை சொல்லவும் உனக்கு அதிகாரமில்லை !
நீ கண்ணனுக்காக வாழ்ந்து கொண்டிரு !
குருஜீ கோபாலவல்லிதாசர்

Tuesday, October 4, 2016

கரை சேர்ப்பேன்!


குறை சொல்லாதே !

க்ருஷ்ணனின் தபால் 
📬
ஒவ்வொருவரும் வாழ்வை ஒவ்வொரு விதமாய் பார்க்கின்றனர் !
அதில் தவறேதுமில்லை !
நீ வாழ்வை பார்க்கும் முறைதான் சரி என்று நினைப்பது தான் தவறு !
க்ருஷ்ணன் ஒவ்வொருவரையும் பல விதமாக பக்குவப்படுத்தி, வாழ்வின் ரஹஸ்யத்தை புரியவைக்கிறான் !
நீ வாழும் முறையை மட்டும் பார் ! அடுத்தவரை குறை சொல்லாதே !

குருஜீ கோபாலவல்லிதாசர்

அர்த்தம் உண்டு!

க்ருஷ்ணனின் தபால் 
📬
குறிஞ்சி மலர் பூப்பது 12 வருடங்களுக்கு ஒரு முறையே !
அதனால் அதற்கு மரியாதையே ஒழிய அவமானம் இல்லை !
அது 12 வருடங்கள் வாழ்வதால் தானே பூக்கிறது !!!

சில சந்தர்ப்பங்களில் வாழ்வில் ஏதும் நடக்கவில்லை, கிடைக்கவில்லை என்றாலும் வாழ்வது தர்மம் என்று வாழ் !!
ஒரு நாள் உன் வாழ்விற்கும் அர்த்தம் உண்டு, பலனுண்டு என்று நீ உணர்வாய் !
கண்ணன் உன்னை ஆசையோடு படைத்திருக்கிறான் !
கண்ணன் உன்னை காரணத்தோடு வாழ வைக்கிறான் !


குருஜீ கோபாலவல்லிதாசர்

Sunday, October 2, 2016

க்ருஷ்ணனின் அந்தப்புரம் !

க்ருஷ்ணனின் தபால் 📬
உன் ஆனந்தத்திற்கு எல்லையே கிடையாது !
மனதை எப்போதும் லேசாக வைத்திரு!
மனம் சுமை தாங்கி அல்ல !
மனம் க்ருஷ்ணனின் அந்தப்புரம் !
அங்கே அவனைத் தவிர யாரையும் விடாதே !
சரியா ?!?
குருஜீ கோபாலவல்லிதாசர்