Guru Vedham

Guru Vedham

Friday, September 11, 2015

வாங்கிக்கொள்வான்…


ராதேக்ருஷ்ணா…

நீ ஒவ்வொரு நாளும் செய்யும் நிவேதனத்தை, கண்ணன் மிகவும் ஆசையுடன், சிரத்தையுடன், கண்களில் ஆனந்தக்கண்ணீரோடு சாப்பிடுகிறான்...
ஒரு நாள் கூட இதுவரை நீ கொடுத்த எதிலும் கண்ணன் துளி குற்றமோ குறையோ கண்டதில்லை...
அதனால் ஒவ்வொரு நாளும் ஆசையோடு கண்ணனுக்குத் தா...
நிச்சயமாக ஒரு நாள் உன் கண்ணெதிரே வந்து அவன் நீ தருவதை நேராக வாங்கிக்கொள்வான்…

இனி எல்லாம் சுகமே….


ராதேக்ருஷ்ணா…

மாடு மேய்க்கும் குலத்தின் தலையெழுத்தை மாற்ற, ஓரிரவில் அவர்களின் கோகுலத்தைத் தேடி வந்த அதே கோபாலன், உன் தலையெழுத்தையும், உன் குடும்பத்தின் தலையெழுத்தையும் மாற்ற சபதமெடுத்து கோகுலாஷ்டமி அன்று உன் வீட்டிற்கு வந்திருக்கிறான்...
அதனால் இனி எல்லாம் சுகமே….

Sunday, September 6, 2015

நன்னா பாத்துக்கணும்

ராதேக்ருஷ்ணா…

கிச்சா உன் வீட்டில் உள்ளே நுழைஞ்சு ஒளிஞ்சிண்டு இருக்கான்...
விடாமல் நாம ஜபம் பண்ணு...
கட்டாயம் உனக்குப் புரியும்....
கிச்சா ஆசையோட வந்திருக்கான்...
கிச்சா அழகா வந்திருக்கான்...
கிச்சா ஜோரா வந்திருக்கான்...
கிச்சா சமத்தா வந்திருக்கான்...
கிச்சா அமர்க்களமா வந்திருக்கான்...
கிச்சா நிறைய பக்தாளோட வந்திருக்கான்...
நாம ஜபம் பண்ணி அப்படியே அவனை உன் வீட்டில் வச்சுக்கோ...

கிச்சாவை நன்னா பாத்துக்கணும் சரியா…

Friday, September 4, 2015

கோகுலாஷ்டமி ஆசீர்வாதங்கள்...

ராதேக்ருஷ்ணா…

நாளை கண்ணனின் பிறந்த நாள்....
உள்ளம் கவர் கள்வனின் அவதார நாள்...
வெண்ணெய் திருடன் பூமிக்கு வந்த நாள்...
மாடு மேய்ப்பன் உனக்காக வரப்போகிறான்...
அகிலாண்ட கோடி ப்ரும்மாண்ட நாயகன் உன் வீட்டிற்கு வருகிறான்...
உன்னோடு உன் வீட்டில், உன் குடும்பத்தில் ஒருவனாக வசிக்க வருகிறான்...
தன்னுடன் பல மஹாத்மாக்களை உன் வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வருகிறான்....
இனி ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே...
விடிந்தால் கோகுலாஷ்டமி....

இனிய பக்திமயமான கோகுலாஷ்டமி ஆசீர்வாதங்கள்...
இனிய நாம ஜப க்ருஷ்ண ஜயந்தி ஆசீர்வாதங்கள்…


Thursday, September 3, 2015

தயாரா???

ராதேக்ருஷ்ணா…

உன் மனம் என்னும் வெண்ணெயைத் திருட கண்ணன் பார்த்துக்கொண்டிருக்கிறான்...

நீ க்ருஷ்ண நாம ஜபத்தில் மூழ்கியிருக்கும் சமயத்தில் உன் மனதைத் திருடி தன்னோடு வைத்திருக்க ஆசையாய் அலைகிறான்...
நீ விடாமல் ஜபி...
எதையும் யோசிக்காமல் ஜபி....
அவன் பிறந்தநாளன்று உன் மனதைத் திருட திட்டமிட்டிருக்கிறான்....

நீ தயாரா….

ஜோராக கொண்டாடப்போகிறாய்….


ராதேக்ருஷ்ணா…

உன் கண்ணனின் பிறந்தநாளுக்கு யாரையெல்லாம் கூப்பிடனும் தெரியுமா ?!?
ஸ்வாமி இராமானுஜரை ஆசையாய் கூப்பிடு....
ஸ்ரீ ஆதிசங்கரரை உரிமையோடு கூப்பிடு...
ஆழ்வார்களை அன்போடு கூப்பிடு....
ஸ்ரீக்ருஷ்ண சைதன்யரை மறக்காமல் கூப்பிடு...
ஆண்டாள்,மீரா மாதா, ஜனா பாய், சக்குபாய், விடாமல் கூப்பிடு....
சந்த் ஞானதேவர், பக்த நாமதேவர், ஸ்ரீ துகாராம்,அழகாய் கூப்பிடு....
புரந்தரதாசர், அன்னமாச்சாரியார், ஸ்வாமி ராகவேந்திரா, எல்லோரையும் உள்ளன்போடு கூப்பிடு....
நாமஜபம் செய்....கட்டாயம் வருவார்கள்...
உன் வீட்டில் இந்த முறை ஸ்ரீ க்ருஷ்ணனின் பிறந்த நாளை ரொம்ப ஜோராக கொண்டாடப்போகிறாய்….

Wednesday, September 2, 2015

பிறந்த நாள் வருகிறது...


ராதேக்ருஷ்ணா…

கண்ணன் உன்னோடு உன் வீட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறான்...
உன் கண்ணனின் பிறந்த நாள் வருகிறது...
கண்ணனுக்கு புதுத்துணி வாங்கியாச்சா?????
கண்ணனின் பிறந்த நாளன்று, அவனுக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டு....
கண்ணனின் பிறந்த நாளுக்கு, யாரையெல்லாம் கூப்பிடப்போகிறாய் ???
கண்ணனின் பிறந்த நாளுக்கு அவனுக்கு என்ன வேண்டும் என்று கேட்டாயா ???