Guru Vedham
Friday, November 28, 2014
Wednesday, November 19, 2014
ஆசைப்படு...
ராதேக்ருஷ்ணா …
ஆசைப்படு...
க்ருஷ்ணனைப் பார்க்க ஆசைப்படு...
க்ருஷ்ணனோடு பேச ஆசைப்படு...
க்ருஷ்ணனிடம் சண்டைபோட ஆசைப்படு...
க்ருஷ்ணனுக்கு முத்தம் தர ஆசைப்படு...
க்ருஷ்ணனை கட்டிப்பிடிக்க ஆசைப்படு...
க்ருஷ்ணன் உன் வீட்டில் உன்னோடு வாழ ஆசைப்படு...
க்ருஷ்ணனோடு தூங்க ஆசைப்படு...
க்ருஷ்ணனை பலவிதமாய் அனுபவிக்க ஆசைப்படு...
க்ருஷ்ணன் மடியில் உயிரை விட ஆசைப்படு…
Thursday, November 6, 2014
க்ருஷ்ணனை நம்பு
ராதேக்ருஷ்ணா …
ஒரு பிரச்சினையை பகவானிடம் சொன்ன பிறகு திரும்ப யோசிக்கவே கூடாது. க்ருஷ்ணனுக்கு உன்னை நன்றாகத் தெரியும்.
எப்படி தாய் வரிக்குதிரைக்கு தன் குட்டியின் உடலில் உள்ள கோடுகளைக் கொண்டு அதை அடையாளம் தெரியுமோ, அதுபோல க்ருஷ்ணனுக்கும் நம் மனம்,உடல், பலம், பலவீனம், தேவை, எல்லாம் நன்றாகவே தெரியும். உன் வாழ்க்கையை க்ருஷ்ணனை நம்பி தைரியமாக ஒப்படை.அதன் பிறகு நீ உன் வாழ்வைப் பற்றி யோசிக்கவே அவசியமில்லை. க்ருஷ்ணன் உன்னை எப்படிக் காக்கிறான் என்பதை மட்டும் பார்….
ஜெயித்து வருவாய்…
ராதேக்ருஷ்ணா…
வாழ்க்கையில் பிரச்சினை கஷ்டம் எல்லாம் ஏன் வருகிறது தெரியுமா ?
உனக்குத் தன்னம்பிக்கை அதிகமாவதற்காகத் தான். நல்லா கவனித்துப் பார். ஒவ்வொரு பிரச்சனையிலும், ஒவ்வொரு கஷ்டத்திலும் உனக்கு இன்னும் பலம் கூடியிருக்கிறது. உன் மனதுக்கு விசேஷமான சக்தி கிடைத்திருக்கிறது. பகவான் க்ருஷ்ணன் உன்னை வளர்த்துக்கொண்டு வருகிறான். கஷ்டமும் பிரச்சனையும் உனக்கு விசேஷமான பலம் கொடுக்கும் மருந்துகள். அதனால் நன்றாக அவைகளை ஏற்றுக்கொள். க்ருஷ்ணன் உன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் இருக்கும்வரை நிச்சயமாக நீ எல்லாவற்றையும் ஜெயித்து வருவாய்…
குதூகலமாய் இரு….
ராதேக்ருஷ்ணா …
க்ருஷ்ணன் பூமியாக இருந்து உன்னைத் தாங்குகிறான்....
க்ருஷ்ணன் சூரியனாக இருந்து உனக்கு வெளிச்சம் தருகிறான்....
க்ருஷ்ணன் காற்றாக உனக்குள் நுழைகிறான்...
க்ருஷ்ணன் ஆகாரமாக இருந்து உனக்கு பலம் தருகிறான்...
க்ருஷ்ணன் வஸ்திரமாக இருந்து உன் மானத்தைக் காக்கிறான்...
இப்படி பலவிதத்தில் க்ருஷ்ணன் உன்னோடு இரண்டறக் கலந்திருக்கிறான்...
ஆண்டாள் சொன்னது போல "உந்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது"...
என்று க்ருஷ்ணனோடு நம் பந்தம் நிரந்தரம்...
அதனால் கவலையோ, பயமோ, குழப்பமோ, வெறுப்போ, ஏமாற்றமோ வேண்டாம்...
க்ருஷ்ணன் உன்னை விட்டு ஒதுங்குவதுமில்லை. உன்னை ஒதுக்குவதுமில்லை...அதனால் குழந்தை போல குதூகலமாய் சந்தோஷமாய் இரு….
பக்தி செய்...
ராதேக்ருஷ்ணா ...
பகவான் எந்த இடத்தில் உன்னை எப்படி வைத்திருக்கிறாரோ, அந்த நிலைமையில் இருந்துகொண்டு திடமாக, தைரியமாக, நிதானமாக பக்தி பண்ணிக்கொண்டிரு...எப்படி ஒரு தாய்பூனை தன் குட்டியை எந்த இடத்தில் வைத்தால் நல்லது என்று தீர்மானித்து வைக்கிறதோ, அதுபோல பகவானும் உன்னை நல்ல இடத்தில்தான் வைக்கிறார்...நீ பாட்டுக்கு உன் கடமையை செய்.நாமஜபம் செய்...பகவான் உன்னை விட்டுக்கொடுக்கவும் மாட்டார்...கெட்டுப்போகவும் விடமாட்டார்...எத்தனையோ கடந்து வந்தாய்...பக்தி செய்...உன் வாழ்க்கை க்ருஷ்ணனுடைய சொத்தாக நன்றாகவே இருக்கும்...கவலையேபடாதே….
Subscribe to:
Comments (Atom)



















